News October 11, 2025
தென்காசி: இன்று கிராம சபை கூட்டத்தில் ஆட்சியர் பங்கேற்பு

இன்று சனிக்கிழமை (11.10.2025) காலை 11.00 மணி அளவில் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் வட்டாரம் வீரசிகாமணி கிராமத்தில் நடைபெற உள்ள கிராம சபை கூட்டத்தில் தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் கலந்துகொண்டு அனைத்து மக்கள் அளிக்கும் கோரிக்கை மனுக்கள் மீதும் அதிகாரிகள் கருத்துக்களை கேட்டு பதிவு செய்ய உள்ளார். இந்த கூட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ள ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.
Similar News
News December 11, 2025
தென்காசி மாவட்டத்தில் 2,274 வீடுகள் ஒதுக்கீடு

தென்காசி மாவட்டத்தில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 2024-25, 2025-26 நிதி ஆண்டுகளில் ஆலங்குளம் 739, கடையம் 192, கடையநல்லூர் 161, கீழப்பாவூர் 209, குருவிகுளம் 216, மேலநீலிதநல்லூர் 209, சங்கரன்கோவில் 170, வாசுதேவநல்லூர் 147, தென்காசி ஒன்றியத்தில் 121, செங்கோட்டை 110 வீடுகள் என மொத்தம் ரூ.70.49 கோடியில் 2,274 வீடுகள் கலைஞரின் கனவு இல்ல திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
News December 11, 2025
தென்காசியில் EB கட்டணம் அதிகமா வருதா?

தென்காசி மக்களே உங்க வீட்டில் திடீரென மின் கட்டணம், நீங்க பயன்படுத்துவதை விட அதிகம் வருகிறதா. இதுபோன்ற பிரச்னைகளுக்கு நீங்கள் EB அலுவலகத்துக்கு செல்ல வேண்டும் என்று அவசியல் இல்லை. தமிழ்நாடு அரசின் <
News December 11, 2025
SIR பணி.. தென்காசிக்கு சிறப்பு அதிகாரி நியமனம்

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) 2026 தொடர்பாக, தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, மதுரை, விருதுநகர், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கான SIR பார்வையாளராக மத்திய சுகாதாரம் - குடும்ப நல அமைச்சகத்தின் இணைச்செயலர் விஜய் ரெஹ்ராவை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.


