News October 12, 2025
தென்காசி அணிக்கு ரூ.4.5 லட்சம் பரிசு

தென்காசி மாவட்ட கால்பந்து அணி மாநில அளவில் பள்ளிகளுக்கு இடையே நடந்த முதலமைச்சர் கோப்பைக்கான கால்பந்து போட்டியில் மூன்றாம் பரிசு பெற்று, பரிசுத்தொகையாக ரூ.4.5 லட்சம் வென்றது. ஒவ்வொரு மாணவிக்கும் தலா 25000 வங்கி கணக்கில் வர வைக்கப்படும் என கூறப்படுகிறது. இதனையடுத்து வெற்றி பெற்ற அணியினரை தென்காசி தெற்கு மாவட்ட திமுக முன்னாள் செயலாளர் சிவபத்மநாதன் மற்றும் சமூக ஆர்வலர்கள் இன்று பாராட்டினர்.
Similar News
News December 10, 2025
தென்காசி: மாடு வாங்க ரூ.1.2 லட்சம் கடனுதவி!

தமிழக அரசின் TABCEDCO மூலம் ஒரு பயனாளிக்கு, 2 கறவை மாடுகள் வாங்க ரூ.1,20,000 கடனுதவி வழங்கப்படுகிறது. இந்த கடனை திருப்பி செலுத்த 3 ஆண்டுகள் கால அவகாசமும் உண்டு. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் <
News December 10, 2025
சங்கரன்கோவிலில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

சங்கரன்கோவில் அம்பேத்கர் நகரை 1ம் தெருவை சேர்ந்த சீனிவாசன் (32) என்பவர் குடும்ப பிரச்சினை காரணமாக இன்று காலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த சங்கரன்கோவில் போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News December 10, 2025
தென்காசி: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

1.முதலில் <
2.பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
3.இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4.பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்க


