News November 10, 2025

தென்காசியில் 74.84 % விண்ணப்ப படிவம் வழங்கல்

image

தென்காசியில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (BLOs)  04.11.2025 முதல் 04.12.2025 வரை வீடு வீடாகச் சென்று கணக்கெடுப்பு படிவம் வழங்கி வருகின்றனர்.  இதுவரை தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து 5 சட்டமன்ற தொகுதிகளிலும் சேர்த்து. 09.11.2025-ம் தேதி  காலை 08.00 மணி நிலவரப்படி  மொத்தம் 13,75,091 மொத்த வாக்காளர்களில் 10,29,175 வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. 74.84 % சதவீதம் வழங்கபட்டுள்ளது.

Similar News

News December 7, 2025

தென்காசியில் அப்ரண்டீஸ் மேளா.. கலெக்டர் அறிவிப்பு

image

தென்காசி மாவட்டத்தின் பயிற்சி‌ அலுவலகத்தின் சார்பாக பிரதம மந்திரி தேசியத் தொழில் பழகுனர் அப்ரண்டீஸ் மேளா, தென்காசி அரசு தொழில் பயிற்சி நிலையத்தின் சேர்க்கை முகாம் நாளை (திங்கட்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுகிறது. பயிற்சி காலத்தில் மாதந்தோறும் உதவித்தொகை ரூ.9,600 முதல் ரூ.12,500 வரை வழங்கப்படும். இந்த தகவலை தென்காசி மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர் தெரிவித்துள்ளார்.

News December 7, 2025

தென்காசி: கரண்ட் கட்.? இனி Whatsapp மூலம் தீர்வு

image

தென்காசி மாவட்டத்தில் உங்கள் பகுதியில் ஆபத்தான வகையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், மின்கம்பிகள், திடீர் கரண்ட் கட் உள்ளதா? இது குறித்து மின்வாரியத்திடம் WhatsApp மூலமாக எளிதில் புகார் அளிக்கலாம். 89033 31912 என்ற எண்ணின் வாயிலாக மேற்கண்ட புகார்களை எவ்வித அலைச்சலும் இல்லமால் போட்டோவுடன் புகாரளிக்கலாம். அவசர உதவிக்கு – 94987 94987 என்ற எண்ணையும் அழைக்கலாம். இத்தகவலை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க

News December 7, 2025

தென்காசி: கொலை வழக்கில் 11 பேர் அதிரடி கைது

image

நெற்கட்டும்செவல் பச்சேரி கிராமத்தில் குடும்ப சொத்து பிரச்சனை காரணமாக மாற்றுத்திறனாளி விவசாயியான சங்கரலிங்கம் கொலை செய்யப்பட்ட நிலையில் வழக்குப்பதிவு செய்து  அதே கிராமத்தை சேர்ந்த சங்கரலிங்கத்தின் உறவினர்களான சக்திவேல், ராமர், மாரியப்பன், பேச்சிமுத்து, சுப்புராஜ், துரை, செல்லையா, மாங்கனி, காளியம்மாள் மற்றும் மாரியம்மாள்  உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

error: Content is protected !!