News August 20, 2024
தென்காசியில் இன்று பிறக்கும் குழந்தைக்கு மோதிரம்

தென்காசி மாவட்ட ஊராட்சிமன்ற தலைவர்களின் கூட்டமைப்பு தலைவர் டி.கே.பாண்டியன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று (ஆக.20) முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 80வது பிறந்தநாளை முன்னிட்டு கடையம் அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு மோதிரம் அணிவிக்கப்படுகிறது. இதில் தென்காசி எம்எல்ஏ பழனி கலந்து கொண்டு குழந்தைகளுக்கு மோதிரம் அணிவிக்கிறார். அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
Similar News
News January 22, 2026
தென்காசி மக்களே., சம்பளம் சரியாக தரவில்லையா?

தென்காசி மக்களே, உங்களை முன்னறிவிப்பின்றி வேலையை விட்டு நீக்கினாலோ அல்லது சரியான சம்பளம் வழங்காவிட்டாலோ தொழிலாளர் நலவாரியத்தில் நீங்கள் புகார் அளிக்கலாம். அதன்படி, வீட்டு வேலை செய்பவர்கள் நலவாரியம் – 04428110147, கட்டுமான தொழிலாளர் நலவாரியம் – 044-28264950, 044-28264951, 04428254952, உடலுழைப்பு தொழிலாளர் நலவாரியம் – 044-28110147. இந்த தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க!
News January 22, 2026
தென்காசி இளைஞர்களே நாளை (ஜன 23) மிஸ் பண்ணாதீங்க

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் அமைந்துள்ள சர்தார் ராஜா பொறியியல் கல்லூரி வளாகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை 23.02.2026 (வெள்ளிக்கிழமை) காலை 9.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை நடைபெறுகிறது. எனவே வேலை தேடும் இளைஞர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். இந்த நல்ல வாய்ப்பினை வேலை நாடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க.
News January 22, 2026
தென்காசி: பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000!

தென்காசி மக்களே, உங்க வீட்டில் பெண்குழந்தைகள் இருக்கா? முதலமைச்சரின் பெண்கள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 பெண் குழந்தை இருந்தால் 50,000/- மும், 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா 25,000/-மும் வழங்குகிறது. 18 வயது முடிந்த பின் வட்டியுடன் 3 லட்சமாக வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு <


