News May 15, 2024

தென்காசியில் அனைவருக்கும் குறுஞ்செய்தி மூலம் மலை அலர்ட்

image

தமிழகத்தில் மேலடுக்கு சுழற்சியால் ஆங்காங்கே கோடை மழை பெய்து வருகிறது. இதனால் வெயில் தாக்கம் குறைந்து மக்கள் நிம்மதி அடைந்து வருகின்றனர். தென்காசி மாவட்டத்தில் இன்று கனமழை பெய்யும் என அனைத்து தரப்பு மக்களுக்கும் குறுஞ்செய்தி மூலமாக தேசிய பேரிடர் மீட்பு மேலாண்மை துறை மூலம் அனைவரது தொலைபேசிக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.

Similar News

News November 7, 2025

தென்காசி: சித்திர சபையை தரிசனம் செய்ய தடை

image

தென்காசி மாவட்டம், இந்து சமய அறநிலைத்துறைக்கு பாத்தியப்பட்ட திருக்குற்றால நாத சுவாமி கோயிலில் நடராச பெருமாள் திருத்தாண்டவம் ஆடியுள்ள பஞ்ச சபைகளில் ஒன்றான சித்திர சபையில் திருப்பணி வேலைகள் நடைபெற உள்ளது. எனவே தற்காலிகமாக பக்தர்களுக்கு தரிசனம் செய்ய அனுமதி இல்லை என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் விவரங்களுக்கு 04633213298 என்ற எண்களை தொடர்பு கொள்ளவும்.

News November 7, 2025

தென்காசி: விவசாயிகளுக்கு ஆட்சியர் முக்கிய தகவல்

image

தென்காசி மாவட்டத்தில் தற்போது 9237 விவசாயிகள் பாரத பிரதமரின் கௌரவ நிதி உதவி பெறும் விவசாயிகள் தனித்துவ அடையாள எண் (Farmers Registry) பெறாமல் உள்ளனர். மத்திய அரசு மூலம் வழங்கப்படும் ரூ.2000/- உதவி தொகை பெறுவதற்கு தனித்துவ அடையாள எண் (Farmers Registry) கட்டாயமாக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் தகவல்.

News November 6, 2025

தென்காசி வன கோட்டத்தில் புலிகள் கணக்கெடுப்பு பணி பயிற்சி

image

தென்காசி வன கோட்டத்தில் 2025 ஆம் ஆண்டுக்கான புலிகள் கணக்கெடுப்பு பயிற்சி, மாவட்ட வன அலுவலர் டாக்டர்.ராஜ்மோகன் தலைமையில் இன்று குற்றாலம் வன ஓய்வு விடுதியில் நடைபெற்றது. உதவி வன பாதுகாவலர் நெல்லைநாயகம் முன்னிலை வகித்தார். தேசியப் புலிகள் ஆணைய வழிகாட்டுதல்படி, களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக உயிரியலாளர் ஸ்ரீதர், தென்காசி வன கோட்ட உயிரியலாளர் கந்தசாமி ‘Mstrip App’ மூலம் பயிற்சி அளித்தனர்.

error: Content is protected !!