News April 18, 2024
தூத்துக்குடி: 91.5% பூத் ஸ்லிப் விநியோகம்

தூத்துக்குடி மக்களவை தொகுதியில் உள்ள 1,624 வாக்குச்சாவடிகளில் 14.58 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இவர்களுக்கு இதுவரை 91.5% பூத் ஸ்லிப் வழங்கப்பட்டுள்ளது. பூத் ஸ்லிப் கிடைக்கப் பெறாதவர்களுக்கு வாக்குச்சாவடியில் நிலை அலுவலர்களால் வழங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.
Similar News
News November 10, 2025
தூத்துக்குடி ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

2025-2026-ம் ஆண்டிற்கு தமிழ்நாடு சட்டமன்ற பொது கணக்கு குழு அதன் தலைவர் செல்வப் பெருந்தகை தலைமையில் வருகின்ற 12-ம் தேதி ஆய்வு மேற்கொள்ள தூத்துக்குடி மாவட்டத்திற்கு வருகை தர உள்ளது. அப்பொது குழுவிடம் பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை அளிக்கலாம் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
News November 10, 2025
தூத்துக்குடி மாற்றுத் திறனாளிகளுக்கு முக்கிய அறிவிப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான மதிப்பீட்டு முகாம் கடந்த 3-ம் தேதி முதல் தொடங்கி வரும் 18-ம் தேதி வரை அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் நடைபெற உள்ளது. இதில் சுற்றுவட்டார பகுதியில் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்கள் கலந்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News November 10, 2025
தூத்துக்குடி இரவு ஹலோ போலீஸ் விவரம்

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்படி, இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விவரங்களை தற்போது கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. அவசர காலங்களில் பொதுமக்கள் 100 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.


