News February 23, 2025
தூத்துக்குடி வருகை தந்த லெஜண்ட் சரவணன்

திரைப்பட நடிகரும் தொழில் அதிபருமான லெஜெண்ட் சரவணன் இன்று தூத்துக்குடி வந்திருந்தார். அவருக்கு தூத்துக்குடியில் சுற்றுச்சூழலை பாதுகாக்க மரம் நடும் பணியில் ஈடுபட்டு வரும் ஆல கேன் டிரஸ்டை சேர்ந்த அரசு வழக்கறிஞர் மோகன்தாஸ் சாமுவேல் ஆலமரக்கன்றை பரிசாக வழங்கினார். அதற்கு நடிகர் சரவணன் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
Similar News
News July 8, 2025
தூத்துக்குடி பாஜக அலுவலகத்தின் குடிநீர் இணைப்பு துண்டிப்பு

தூத்துக்குடி சங்கரப்பேரி ரோட்டில் உள்ள தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி அலுவலகம், கடந்த 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் திறக்கப்பட்டது. இந்த அலுவலகம் உரிய வரி செலுத்தவில்லை எனக் கூறப்படுகிறது. மாநகராட்சி நோட்டீஸ் வழங்கியும், முறைகேடாக இயங்கிய குடிநீர் இணைப்பை அதிகாரிகள் நேற்று (ஜூலை.07) துண்டித்தனர். வரி செலுத்தாததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.
News July 8, 2025
தூத்துக்குடி இரவு ரோந்து போலீஸ் விவரம்

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்படி, இன்று (ஜூலை 7) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விவரங்களை தற்போது கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. அவசர காலங்களில் பொதுமக்கள் 100ஐ தொடர்பு கொள்ளலாம்,
News July 7, 2025
திருச்செந்தூர் கும்பாபிஷேகம் – நன்றி தெரிவித்த எம்.பி

தூத்துக்குடி எம்.பி கனிமொழி தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது; “திருச்செந்தூர் முருகன் கோயிலில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு சிறப்பாக கும்பாபிஷேகம் நடந்து முடிந்திருக்கிறது. இதனை சிறப்பாக நடத்த வழி காட்டிய அமைச்சர்களான சேகர் பாபு, அனிதா ராதாகிருஷ்ணன், கே.என்.நேரு மற்றும் அரசு அதிகாரிகள், தன்னார்வலர்கள், பொது மக்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.