News April 1, 2025

தூத்துக்குடி மீனவர் குறை தீர்ப்பு கூட்டம் அறிவிப்பு 

image

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து மாதம் தோறும் மீனவர் குறை தீர்ப்பு நாள் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த மாதத்திற்கான மீனவர் குறை தீர்ப்பு நாள் கூட்டம் வரும் 4-ஆம் தேதி ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து காலை நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் இன்று தெரிவித்துள்ளார். மீனவர்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு குறிகளை தெரிவிக்க கேட்டுக்கொண்டுள்ளார்.

Similar News

News February 7, 2026

தூத்துக்குடி: பள்ளி மாணவன் பரிதாபமாக பலி

image

தூத்துக்குடி டவுண் தனியார் பள்ளியில் இருந்து கன்னியாகுமரிக்கு சுற்றுலா சென்று விட்டு நேற்றிரவு திரும்பிக் கொண்டிருந்தபோது வள்ளியூர் நான்கு வழிச்சாலையில் பேருந்தின் பின் கதவு எதிர்பாராத விதமாக திறந்தது. படிக்கட்டு வழியாக 9ம் வகுப்பு மாணவன் நவீன் குமார் என்பவர் கீழே விழுந்ததில் பின்னால் இருந்து வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். வள்ளியூர் போலீஸ் விசாரணை.

News February 7, 2026

தூத்துக்குடி துறைமுகத்தில் ட்ரோன் எதிர்ப்பு அமைப்பு தொடக்கம்

image

தூத்துக்குடி துறைமுகத்தில் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் இந்தியாவிலேயே முதல்முறையாக மேம்படுத்தப்பட்ட ட்ரோன் எதிர்ப்பு பாதுகாப்பு அமைப்பு அமைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அனுமதி இல்லா ட்ரான்களை கண்டறிந்து அதனை செயலிழக்க செய்யும் வகையில் இந்த அமைப்பு செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டிலேயே முதல் முறை என்பதால் இந்த பெருமை தூத்துக்குடியைச் சாரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News February 7, 2026

தூத்துக்குடி பெண் கொலை; 8 ஆண்டுகளுக்கு பிறகு கைது

image

கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இலுப்பையூரணி பகுதியில் கடந்த 2018 ஆண்டு 48 வயது பெண்ணை தாக்கி கொலை செய்த சம்பவத்தில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதில் 8 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த டேவிட், ராஜ் இருவரையும் கோவில்பட்டி காவல் கண்காணிப்பாளர் ஜெகநாதன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு கைது செய்து சிறையில் அடைத்தனர்.

error: Content is protected !!