News October 18, 2025
தூத்துக்குடி: மக்களே கவனம்.. ஆட்சியர் எச்சரிக்கை

தூத்துக்குடி அருகே உள்ள உப்பாற்று ஓடையில் பெய்து வரும் கனமழை காரணமாக கோரம்பள்ளம் குளத்திற்கு இன்று காலை 5.45 மணி நிலவரப்படி 1000 கன.அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால், குளத்தின் பாதுகாப்பு கருதி தண்ணீர் திறந்து விடப்பட உள்ளது. எனவே, கோரம்பள்ளம் குளம் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் கேட்டுக் கொண்டுள்ளார்.
Similar News
News November 15, 2025
தூத்துக்குடி: கல்லால் தாக்கி கொலை; 4 பேருக்கு ஆயுள்

தூத்துக்குடி மேட்டுப்பட்டி சங்கு குளி காலனியை சேர்ந்தவர் முருகன். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி ராஜா கணேசன் முத்துச் செல்வனுக்கும் முன் விரோதம் இருந்துள்ளது. கடந்த 2023 ம் ஆண்டு இந்த நான்கு பேரும் சேர்ந்து முருகனை கல்லால் தாக்கி கொலை செய்துள்ளனர். வழக்கு தூத்துக்குடி நீதி மன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் கருப்பசாமி உட்பட 4 பேருக்கும் இன்று ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
News November 15, 2025
தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பின் படி, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் 2026-க்கான சிறப்பு முகாம் இந்த மாதம் 15.11.2025 மற்றும் 22.11.2025 ஆகிய இரு சனிக்கிழமைகளிலும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நடைபெறுகிறது. பெயர் சேர்ப்பு, நீக்கம், முகவரி மாற்றம் உள்ளிட்ட திருத்தப் பணிகளுக்கான படிவங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News November 15, 2025
தூத்துக்குடி ஆட்சியர் அறிவிப்பு: வாக்காளர் பெயர் சேர்க்கை முகாம்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பின் படி, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் 2026ற்கான சிறப்பு முகாம் இந்த மாதம் 15.11.2025 மற்றும் 22.11.2025 ஆகிய இரு சனிக்கிழமைகளிலும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நடைபெறுகிறது. பெயர் சேர்ப்பு, நீக்கம், முகவரி மாற்றம் உள்ளிட்ட திருத்தப் பணிகளுக்கான படிவங்கள் வழங்கப்பட்டு பொதுமக்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


