News March 21, 2024
தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் மாற்றம்

2024 மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களின் பட்டியல் சற்றுமுன் வெளியானது. அதன்படி தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் நைனார் நாகேந்திரன் போட்டியிடுவதாக அறிவித்த நிலையில், தற்போது பாஜக கூட்டனியில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் (தமாக) கட்சிக்கு தூத்துக்குடி மக்களவை தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
Similar News
News February 10, 2026
தூத்துக்குடியில் இரவு ரோந்து போலீசார் பட்டியல் வெளியீடு

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு ரோந்து காவல் அதிகாரிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இன்று இரவு ரோந்து காவல் அதிகாரியாக விளாத்திகுளம் உட்கோட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அசோகன் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு இடங்களில் உள்ள அதிகாரிகள் தொடர்பு எண் வெளியிடப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் அவசர தேவைக்கு இந்த எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கூறப்படுகிறது.
News February 9, 2026
BREAKING: திருச்செந்தூர் முருகன் கோயில் திருவிழா தேதி அறிவிப்பு

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசி திருவிழா வரும் 21ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதில் முக்கிய நிகழ்ச்சியான சிவப்பு சாத்தி 27ம் தேதியும், பச்சை சாத்தி 28ம் தேதியும், திருத்தேர் மார்ச் 2ம் தேதியும், தெப்ப தேர் மார்ச் 3ம் தேதியும் நடைபெற உள்ளதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
News February 9, 2026
தூத்துக்குடி: கேஸ் மானியம் ரூ.300 வேண்டுமா?

தூத்துக்குடி மாவட்ட மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? அதற்கு <


