News July 12, 2024
தூத்துக்குடி தொகுதியில் கனிமொழி நன்றி தெரிவிக்க வருகை

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதிகளில் I.N.D.I.A. கூட்டணி சார்பில் தி.மு.க. வேட்பாளராக கனிமொழி கருணாநிதி போட்டியிட்டு வெற்றி பெற்றார். எதிர்த்து போட்டியிட்ட அத்தனை வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர். இந்த நிலையில் வெற்றி பெற்றுள்ள கனிமொழி எம்பி வருகிற ஜுலை.13, 14, 15 ஆகிய தேதிகளில் மக்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்கிறார் என இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News July 8, 2025
தாலி பாக்கியம் நிலைக்க இங்கே வழிபடுங்கள்

தசராவிற்கு புகழ்பெற்ற குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவிலுக்கு அருகே, வட கரூரில் உள்ள காரைக்கால் அம்மையார் கல் மண்டப கோவில் அமைந்துள்ளது. அம்மையார் ஈசனிடம் பேய் உருவம் வேண்டியது இந்த ஸ்தலத்தில் என்பது ஐதீகம். காரைக்காலில் நடப்பது போல இங்கும் ஆனி மாதம் நடைபெறும்ஆனி மாத மாங்கனி திருவிழாவில் பங்கேற்பவர்களுக்கு குழந்தை பாக்கியமும், தாலி பாக்கியம் நிலைத்திருக்கும் என நம்பப்படுகிறது.
News July 8, 2025
சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம் ஆட்சியர் தகவல்!

தூத்துக்குடி மாவட்டத்தில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தையும், சமூக ஒற்றுமையினையும் கடைபிடிக்கும் ஊராட்சிகள் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுகள் பெற உரிய படிவத்தினை தூத்துக்குடி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் பெற்று ஜூலை-14-க்குள் விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தெரிவித்துள்ளார்
News July 8, 2025
உடன்குடி அனல் மின் நிலையத்தில் காலிப் பணியிடங்கள்

தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி அனல் மின் நிலையத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணி புரிய 60 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு, ஐடிஐ அல்லது டிப்ளமோ படித்தவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். மேலும் விவரங்களுக்கு 96886 53470 என்ற எண்ணை காலை 10 முதல் மாலை 5 மணி வரை தொடர்பு கொள்ளலாம். *வேலை தேடும் நபர்களுக்கு இதை ஷேர் பண்ணுங்க*