News November 19, 2025

தூத்துக்குடி: கூட்டு பட்டாவை மாற்ற எளிய வழி!

image

உங்கள் இடம் அல்லது மனை கூட்டு பட்டாவில் இருந்து மாற்ற <>இங்கு க்ளிக்<<>> செய்து பட்டா மாறுதலுக்கு விண்ணப்பித்தல் தேர்ந்தெடுத்து தனி பட்டாவாக மாற்ற பின்வரும் ஆவணங்களை இணைக்க வேண்டும்.
1.கூட்டு பட்டா,
2.விற்பனை சான்றிதழ்,
3.நில வரைபடம்,
4.சொத்து வரி ரசீது,
5.மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதத்துடன் விண்ணப்பித்தால் நிலத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து 30 – 60 நாள்களில் தனி பட்டா கிடைத்துவிடும். SHARE.

Similar News

News January 20, 2026

கோவில்பட்டி: மாமனாரை சரமாரியாக வெட்டிய மருமகன்

image

கங்கைகொண்டானை சேர்ந்த உலகநாதன் தனது மகள் செல்வியை(25) கடந்த 8 மாதங்களுக்கு முன்பு பாப்பாகுடியை சேர்ந்த கருப்பசாமிக்கு(30) திருமணம் செய்து கொடுத்துள்ளார். 4 மாதங்களுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக செல்வி தந்தை வீட்டிற்கு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று காலை உலகநாதன், செல்வி கயத்தாறுக்கு சென்ற போது அங்கு தகராறில் ஈடுபட்ட கருப்பசாமி அரிவாளால் உலகநாதனை வெட்டியதில் அவரது கட்டை விரல் துண்டானது.

News January 20, 2026

தூத்துக்குடி: இளைஞர் கொலையில் ஆயுள் தண்டனை

image

திருச்செந்தூர் ராஜேஷ் கண்ணா நகரில் வசித்தவர் மேடை அலங்கார கலைஞர் கந்தசாமி. இவரது வீட்டின் மாடியில் ராஜஸ்தானை சேர்ந்த வினோத் தாராகா(26) வசித்து வந்தார். கடந்த 2023-ம் ஆண்டு மது போதையில் ஏற்பட்ட தகராறில் கந்தசாமி, கல் மற்றும் அம்மி குலவியால் வினோத் தாராகாவை தாக்கி கொலை செய்துள்ளார். இந்த வழக்கில் கந்தசாமிக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்துள்ளது.

News January 20, 2026

தூத்துக்குடி விவசாயிகளுக்கு கலெக்டர் அறிவிப்பு

image

தூத்துக்குடி மாவட்டத்தில் ஜனவரி 22 (வியாழன்) அன்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும் என ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார். அன்று காலை 10 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக முத்து அரங்கத்தில் இந்த கூட்டம் நடைபெறும். விவசாயிகள் அனைவரும் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவித்து பயன்பெறுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!