News November 19, 2025
தூத்துக்குடி கலெக்டர் பரபரப்பு உத்தரவு!

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் அனைத்து துறை அதிகாரிகளுக்கும் ஒரு தொலைபேசி வழி செய்தியை அவசரமாக வழங்கியுள்ளார். அதன்படி வரும் 21, 22, 23 மற்றும் 24 ஆகிய தினங்களில் தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை பெய்ய உள்ளதால் பல்வேறு அவசரகால பொருட்களை தயார் நிலையில் வைத்திடவும் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யவும் அனைத்து துறை அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளார்.
Similar News
News January 24, 2026
தூத்துக்குடி: 17 கோடி பைக், கார் RC ரத்து – உங்க வண்டி இருக்கா.?

தூத்துக்குடி மக்களே, 17 கோடி பைக், கார், கனரக வாகனங்கள் RC (Automatic Deregistration) ரத்து செய்யபடுவதாக என மத்திய அரசு அறிவித்துள்ளது. உங்க பைக், கார் இருக்கான்னு CHECK!
1.இங்கு <
2.Informational Services பிரிவில் Know Your Vehicle Details என்பதை தேர்ந்தெடுங்க.
3. மொபைல் எண் மற்றும் வாகன எண்ணை பதிவிடுங்க.
4. RC Status – ல் Active (அ) Deregistered என்பதை பார்க்கலாம். SHARE பண்ணுங்க!
News January 24, 2026
தூத்துக்குடியில் 3 பேர் மீது பாய்ந்த குண்டாஸ்!

தூத்துக்குடி அருகே புதியம்புத்தூர் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தியதாக, சுரேஷ்குமார் (42), வடிவேல்முருகன் (44), மகேஷ்வரன் (30) ஆகிய மூவரை புதியம்புத்தூர் போலீசார் கைது செய்தனர். இவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி சிலம்பரசன் பரிந்துரை செய்தார். அதன்பேரில் மூவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டர் இளம்பகவத் உத்தரவிட்டார்.
News January 24, 2026
தூத்துக்குடி: ரூ.3.44 லட்சம் கள்ள நோட்டுகள் பறிமுதல்!

புதூரில் முருகன் என்பவரது பெட்டிக் கடையில் போலீசார் நேற்று சோதனை நடத்தினர். இதில் அரசால் தடை செய்யப்பட்ட 50 புகையிலைப் பாக்கெட்டுகள் இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து, புதூர் போலீஸ் ஸ்டேஷன் அருகே அவரது வீட்டில் சோதனை நடத்தியபோது, 500 ரூபாய் கள்ள நோட்டுகள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, முருகனை கைது செய்த போலீசார், புகையிலை மற்றும் ரூ.3 லட்சத்த 44ஆயிரம் மதிப்புள்ள கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்தனர்.


