News October 11, 2025
தூத்துக்குடி எஸ்.பி போலீஸ் வாகனத்தை ஆய்வு

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தலைமையில் காவல்துறை வாகனங்களின் ஆய்வு மாவட்ட காவல் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் நேற்று (10.10.2025) மாவட்ட காவல்துறை அலுவலக மைதானத்தில் காவல்துறை வாகனங்களை ஆய்வு செய்து, வாகன ஓட்டுனர்களிடம் வாகனங்களில் ஏற்பட்ட குறைபாடுகளை கேட்டறிந்தார்.
Similar News
News December 10, 2025
தூத்துக்குடி: இளைஞர் சரமாரியாக வெட்டிக் கொலை

உடன்குடி பகுதியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி வேல்குமார் (27). இவருக்கும் புனிதராஜிக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு திசையன்விளை ரோடு பகுதியில் புனித ராஜ் அவரது அண்ணன் நாகராஜ் (28) இருவரும் வேல்குமாரை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் படுகாயமடைந்த வேல்குமாரை உயிரிழந்தார். இதுகுறித்து குலசை போலீசார் வழக்குபதிவு செய்து புனிதராஜ், நாகராஜை தேடி வருகின்றனர்.
News December 10, 2025
தூத்துக்குடி மாவட்ட காவல்துறை முக்கிய அறிவிப்பு

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக மக்கள் குறைதீர் மனு கூட்டம் இன்று (டிச.10) மாவட்ட காவல்அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. இந்த குறைதீர் கூட்டத்தில் பொதுமக்கள், காவல் நிலையத்தில் தங்கள் கொடுத்த புகார் மீதான நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு குறைகளுக்கு தீர்வு காண முடியும். இந்த குறைதீர் கூட்டமானது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.பி ஆல்பர்ட் ஜான் தலைமையில் நடைபெறும்.
News December 10, 2025
தூத்துக்குடியில் 2 பேர் மீது பாய்ந்த குண்டாஸ்

தூத்துக்குடி சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த மாதம் நடைபெற்ற கொலை வழக்கில் பிரைன் நகரை சேர்ந்த ராஜா மற்றும் சிவா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிந்துரை செய்தார். இதனையடுத்து இவர்கள் இரண்டு பேரையும் சிப்காட் போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.


