News August 19, 2025
தூத்துக்குடி இளைஞர் நீதிக்குழுவில் காலியிடம்

தூத்துக்குடி மாவட்ட இளைஞர் நீதிக்குழுவில் சமூகப்பணி உறுப்பினர் 2 இடங்களுக்கு அரசு மதிப்பூதிய அடிப்படையில் நியமனம் செய்யப்படுகிறது. 2015ம் ஆண்டு இளைஞர் நீதி சட்டத்தின் கீழ் நடைபெறும் இந்நியமனத்திற்கு 35 முதல் 65 வயது வரை உள்ளவர்கள், குழந்தைகள் நலன், கல்வி, உளவியல், சட்டம் போன்ற துறைகளில் குறைந்தது 7 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் 15.09.2025 மாலை 5.00 மணி.
Similar News
News December 11, 2025
நாய்களுக்கு பிஸ்கட் கொடுத்து திருடிய திருடர்கள்

முள்ளக்காடு நேதாஜி தெருவை சேர்ந்த ரத்தினதுரை அப்பகுதியில் மளிகை கடை வைத்துள்ளார். நேற்று இரவு இவரது கடையின் சட்டர்ன் ஒரு பகுதியை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் ரூ.6000 மதிப்புள்ள பொருட்களை திருடி சென்றுள்ளனர். மேலும் அப்பகுதியில் இருந்த நாய்கள் குரைத்ததால் அவைகளுக்கு பிஸ்கட் கொடுத்துள்ளனர். இந்தச் சம்பவம் பற்றி முத்தையாபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 11, 2025
தூத்துக்குடி: EB கட்டணம் அதிகமா வருதா?

தூத்துக்குடி மக்களே உங்க வீட்டில் திடீரென மின் கட்டணம், நீங்க பயன்படுத்துவதை விட அதிகம் வருகிறதா. இதுபோன்ற பிரச்னைகளுக்கு நீங்கள் EB அலுவலகத்துக்கு செல்ல வேண்டும் என்று அவசியல் இல்லை. தமிழ்நாடு அரசின் TANGEDCO என்ற செயலியில் புகார் அளிக்கலாம் அல்லது 94987 94987 என்ற கட்டணமில்லா புகார் எண்ணை தொடர்பு கொண்டும் புகார் தெரிவிக்கலாம். இதில் மின் கட்டணத்தையும் செலுத்தலாம். இந்த நல்ல தகவலை SHARE பண்ணுங்க.
News December 11, 2025
தூத்துக்குடியில் பைக், கார் வைத்துள்ளோர் கவனத்திற்கு…

தூத்துக்குடி மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <


