News November 26, 2025
தூத்துக்குடி: ஆட்டோ கவிழ்ந்து குழந்தை பலி

தூத்துக்குடி: வேம்பாரைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் அந்தோணி மைக்கேல் ராஜ் தனது ஒரு வயது மகன் மித்ரன் மற்றும் மனைவியுடன் சாயல்குடிக்கு நேற்று ஆட்டோவில் சென்றுள்ளார். அப்போது, கடற்கரை சாலையில் திடீரென ஆட்டோ நிலை தடுமாறி கவிழ்ந்தது. இந்த விபத்தில் காயம் அடைந்த மித்ரன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். இச்சம்பவம் குறித்து சூரங்குடி காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News January 20, 2026
தூத்துக்குடி: அனைத்து CERTIFICATES-ம் இனி Whatsapp-ல்

தூத்துக்குடி மக்களே, பிறப்பு சான்றிதழ், வீட்டு வரி, குடிநீர் வரி, இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட 50 வகையான அரசு சேவைகள் மற்றும் சான்றிதழ்களை வீட்டிலிருந்தே பெறும் வசதியை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. எங்கேயும் அலையாமல், வீட்டில் இருந்தே 7845252525 என்ற WHATSAPP எண்ணிற்கு ஒரு HI மட்டும் அனுப்பி, இந்த சேவைகளைப் பயன்படுத்தலாம். எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் உடனே SHARE பண்ணுங்க
News January 20, 2026
தூத்துக்குடி: ரூ.58,000 சம்பளத்தில் சுகாதார துறையில் வேலை

தமிழ்நாடு சுகாதார துறையில் (TN MRB) காலியாக உள்ள 999 Nursing Assistant பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. சம்பளம் ரூ.15,700 – ரூ.58,100 வரை வழங்கப்படும். இதற்கு 10th, Nursing Assistants course முடித்தவர்கள் பிப்.8க்குள் <
News January 20, 2026
தூத்துக்குடி: நீதிமன்றத்தில் 43 பேர் சரண்

தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்ட எஸ்பியாக சிலம்பரசன் பதவி ஏற்ற நாள் முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக நீதிமன்றங்களில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட குற்றவாளிகளை கைது செய்யும் பணி கடந்த சில நாட்களாக தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதன் எதிரொலியாக தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்தில் 43 பேர் பிடிவாரண்ட் வழக்கிற்காக நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர்.


