News August 22, 2025
தூத்துக்குடி: அதிகாரிகளை விளாசிய கலெக்டர்

தூத்துக்குடி விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில், வில்லிசேரி விவசாயி பிரேம்குமார் உளுந்துக்கான கொள்முதல் பணம் 4 மாதமாக வழங்கப்படவில்லை என முறையிட்டார். கலெக்டர் இளம்பகவத், அவர்களுக்கு 4 மாதமாக பணம் வழங்காமல் இருப்பதை ஏற்க முடியாது; உங்களுக்கு இதைவிட வேறு என்ன வேலை?, ஒரு மாத ஊதியம் வழங்காவிட்டால் பொறுப்பீர்களா? உடனே சென்னை சென்று, பணம் கிடைக்க ஏற்பாடு செய்த பின் தான் இங்கே வர வேண்டும் என உத்தரவிட்டார்.
Similar News
News January 20, 2026
தூத்துக்குடி: ரூ.58,000 சம்பளத்தில் சுகாதார துறையில் வேலை

தமிழ்நாடு சுகாதார துறையில் (TN MRB) காலியாக உள்ள 999 Nursing Assistant பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. சம்பளம் ரூ.15,700 – ரூ.58,100 வரை வழங்கப்படும். இதற்கு 10th, Nursing Assistants course முடித்தவர்கள் பிப்.8க்குள் <
News January 20, 2026
தூத்துக்குடி: நீதிமன்றத்தில் 43 பேர் சரண்

தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்ட எஸ்பியாக சிலம்பரசன் பதவி ஏற்ற நாள் முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக நீதிமன்றங்களில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட குற்றவாளிகளை கைது செய்யும் பணி கடந்த சில நாட்களாக தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதன் எதிரொலியாக தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்தில் 43 பேர் பிடிவாரண்ட் வழக்கிற்காக நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர்.
News January 20, 2026
துத்துக்குடி: தவறுதலாக அனுப்பிய பணத்தை திரும்ப பெறலாம்

தூத்துக்குடி மக்களே; செல்போன் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு SHARE பண்ணுங்க.


