News August 5, 2024
தூத்துக்குடியில் இன்று உள்ளூர் விடுமுறை

தூத்துக்குடியில் உள்ள உலக புகழ்பெற்ற பனிமயமாதா பேராலய 442 ஆண்டு திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. இத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான இன்று (ஆக.5) மாலை வீதிகளில் மாதாவின் சப்பரபவனி நடைபெற உள்ளது. இதனால் இன்று (ஆக.5) தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
Similar News
News January 25, 2026
தூத்துக்குடி: திருமணமான 2-ம் நாளில் பெண் ஓட்டம்

திருச்செந்தூர் அருகே ராமசாமிபுரத்தை சேர்ந்தவர் பழ வியாபாரி பாஸ்கர் (35). இவர் பெண் தரகர் மூலம் தஞ்சாவூரைச் சேர்ந்த ஆதரவற்ற இளம் பெண் ஒருவரை ஜன.20 அன்று திருமணம் செய்துள்ளார். இதையடுத்து ஜன.22 அன்று பாஸ்கர் வெளியே சென்று விட்டு வீட்டுக்கு திரும்பிய போது அந்தப் பெண் வீட்டில் இருந்த பணம் துணிமணிகளுடன் காணாமல் போய் இருந்தது தெரிய வந்தது. இது சம்பந்தமாக திருச்செந்தூர் போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்
News January 25, 2026
தூத்துக்குடி : போஸ்ட் ஆபீஸில் வேலை அறிவிப்பு

தூத்துக்குடி மக்களே, இந்திய அஞ்சல் துறையில் போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர், தபால் சேவகர் உள்ளிட்ட 30,000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு இல்லை. 10-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். உள்ளூர் மொழி மற்றும் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருப்பது கட்டாயமாகும். ஆர்வமுள்ளவர்கள்<
News January 25, 2026
தூத்துக்குடி: போலீசை அறிவாளால் வெட்ட முயன்ற ரவுடி கைது

தூத்துக்குடி வேலாயுதபுரத்தைச் சேர்ந்த பிரவீன்குமார் (23) என்பவர் மீது ஒரு கொலை வழக்கு நிலுவையில் உள்ளது. மேலும் இவர் ரவுடி பட்டியலில் உள்ளார். இந்நிலையில் தாளமுத்து நகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட எஸ்ஐ முத்துராஜாவை அவர் அறிவாளால் வெட்ட முயன்றுள்ளார். இதனைத் தொடர்ந்து பிரவீனை சுற்றி வளைத்த போலீசார் அவரை கைது செய்தனர்.


