News October 10, 2025

தூத்துக்குடியில் இன்று இரவு ரோந்து போலீஸ் விவரம்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்படி, இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விவரங்களை தற்போது கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. அவசர காலங்களில் பொதுமக்கள் 100 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

Similar News

News November 14, 2025

கல்லால் தாக்கி கொலை 4 பேருக்கு ஆயுள்

image

தூத்துக்குடி மேட்டுப்பட்டி சங்கு குளி காலனியை சேர்ந்தவர் முருகன். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி ராஜா கணேசன் முத்துச் செல்வனுக்கும் முன் விரோதம் இருந்துள்ளது. கடந்த 2023 ம் ஆண்டு இந்த நான்கு பேரும் சேர்ந்து முருகனை கல்லால் தாக்கி கொலை செய்துள்ளனர். வழக்கு தூத்துக்குடி நீதி மன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் கருப்பசாமி உட்பட 4 பேருக்கும் இன்று ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

News November 14, 2025

தூத்துக்குடி: இந்த புகார்களுக்கு Police Station செல்ல வேண்டாம்.!

image

தூத்துக்குடி மக்களே, தமிழக காவல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், பாஸ்போர்ட், ஆர்.சி புத்தகம் , ஓட்டுனர் உரிமம், அடையாள அட்டை, school & college certificate இவற்றில் ஏதேனும் ஆவணங்கள் தொலைந்து போனால் காவல் நிலையத்தை அணுக வேண்டிய அவசியமில்லை<> aservices.t police.gov.in<<>> என்ற இணையதளத்தில் புகார் பதிவு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை ஷேர் செய்து தெரியப்படுத்துங்க.

News November 14, 2025

தூத்துக்குடி மக்களுக்கு அமைச்சர் வேண்டுகோள்

image

தூத்துக்குடி அமைச்சர் கீதா ஜீவன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மழைக்காலங்களில் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். இடி, மின்னல் நேரங்களில் பழமையான கட்டிடம், மரங்கள், மின்கம்பங்கள் அருகில் இருக்காமல் பாதுகாப்பான இடத்தில் இருக்க வேண்டும். பெரியவர்கள், குழந்தைகள் நீர் நிலைகளை தவிர்க்க வேண்டும். மேலும் மழைக்காலத்தில் திமுகவினர் தங்கள் பகுதி மக்களுக்கு உதவிகள் செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்

error: Content is protected !!