News September 4, 2025

தூத்துக்குடிகல்லூரி முன்பு இந்திய மாணவர் சங்கத்தினர் போராட்டம்

image

யுஜிசி மானிய குழுவின் வரைவு அறிக்கையானது கல்வியை காவிமயம் ஆக்குவதோடு, அறிவியலுக்கு புறம்பான ஆர்எஸ்எஸ் சித்தாந்தங்களை கல்வியில் திணிக்க முயல்வதாகவும், அதனைக் கண்டித்தும், LOCF அறிக்கையை திரும்ப பெற வலியுறுத்தியும் தூத்துக்குடி வ.உ.சி கல்லூரி வாசல் அருகே இந்திய மாணவர் சங்கம் மாவட்ட செயலாளர் ராம்குமார் தலைமையில் நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது. இதில் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர். 

Similar News

News November 8, 2025

தூத்துக்குடியில் அப்ரண்டீஸ் பயிற்சி! கலெக்டர் அறிவிப்பு

image

தூத்துக்குடியில் வரும் நவ. 10-ம் (திங்கள்) தேதி பிரதம மந்திரியின் தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் கோரம்பள்ளம் அரசு ITI நிலையத்தில் நடைபெறவுள்ளது. இச்சேர்க்கை முகாமில் 8,10, 12th படித்த இதுவரை தொழிற்பழகுநர் பயிற்சி (அப்ரண்டிஸ்) பெறாதவர்கள் என அனைவரும் உரிய அசல் சான்றிதழ்கள், ஆவணங்களுடன் கலந்து கொள்ளலாம் என ஆட்சியர் அறிவுத்தியுள்ளார்.

News November 7, 2025

தூத்துக்குடி: தாசில்தார் எண்கள்.. SAVE பண்ணுங்க.!

image

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தாசில்தார் எண்கள் மாவட்ட இணையதளத்தில் அதிகாரப்பூர்வமாக உள்ளது.
1.தூத்துக்குடி-0461-2321448
2.ஸ்ரீவைகுண்டம்-04630-255229
3.திருச்செந்தூர்-04639-242229
4.சாத்தான்குளம்-04639-266235
5.கோவில்பட்டி-04632-220272
6.ஓட்டப்பிடாரம்-0461-2366233
7.எட்டயபுரம்-04632-271300
8.விளாத்திகுளம்-04638-233126
9.ஏரல்-04630-270055. SHARE பண்ணுங்க.

News November 7, 2025

தூத்துக்குடி மீனவர்களுக்கு ஒரு நற்செய்தி

image

தமிழக முதலமைச்சரின் சார்பில் மீனவர்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தும் விதமாக சிறப்பு மாற்று வாழ்வாதார திட்டம் தொடங்கப்படும் என சட்ட மன்றத்தில் அறிவித்தார். இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த திட்டத்தில் 10000 மீனவர்கள் பயன்பெறுவார்கள் என தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் இளம்பகவத் தனது செய்தி குறிப்பு மூலம்தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!