News November 19, 2025

தூங்கும்போது ஆளை அமுக்கும் பேய்..உண்மையா?

image

தூங்கும்போது யாரோ அழுத்துற மாதிரி இருக்கா? இதை பெரும்பாலானோர் பேய் அழுத்துவதாக நம்புகின்றனர். ஆனால், இது Sleep paralysis எனும் நரம்பியல் பிரச்னை என டாக்டர்கள் சொல்கின்றனர். உங்கள் மூளை தூங்குவதற்கு முன் உங்கள் உடல் தூங்கிவிடுவதால் தான் இது நடக்கிறது. இதிலிருந்து உங்களை பயமுறுத்தி எழுப்பவே பேய் போன்ற மாய தோற்றத்தை உங்கள் மூளை உருவாக்குகிறதாம். இப்படி அடிக்கடி நடந்தால் டாக்டரை அணுகுங்கள். SHARE.

Similar News

News December 7, 2025

ஈரோடு: ரூ.35,000 சம்பளத்தில் ரயில்வே வேலை!

image

ஈரோடு மக்களே, இந்திய ரயில்வே துறையில் காலியாக உள்ள ஜூனியர் இன்ஜினியர் உள்ளிட்ட 2569 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு வேலைக்கு ஏற்ப டிப்ளமோ, பிஎஸ்சி பட்டப்படிப்பு படித்தவர்கள் வரை விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.35,400 வழக்கப்படும். விருப்பமுள்ளவர்கள் வரும் டிச.10ம் தேதிக்குள், இந்த லிங்கை <>க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News December 7, 2025

மதியத்தில் விஜய் பொதுக்கூட்டம்

image

ஈரோட்டில் விஜய் பங்கேற்கும் பொதுக்கூட்டம் டிச.16-ம் தேதி மதியம் 1 – மாலை 6 மணிக்குள் நடைபெறவிருப்பதாக கலெக்டரிடம் செங்கோட்டையன் அளித்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ஈரோடு, பவளத்தாம்பாளையத்தில் 75,000 பேர் வந்து, செல்லும் வகையில் 7 ஏக்கர் இடத்தில் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளதாகவும், ரோடு ஷோ இல்லாமல் பரப்புரை வாகனத்தில் விஜய் உரையாற்ற உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

News December 7, 2025

தவெகவுக்கு செல்கிறாரா இந்த திமுக அமைச்சர்?

image

அடுத்த பிப்ரவரிக்குள் 2 சிட்டிங் மினிஸ்டர்கள் தவெகவுக்கு வருவார்கள் என ஆதவ் பேசியிருந்தார். இந்நிலையில் அதில் ஒருவர் KKSSR-ஆக இருக்கலாமோ என சந்தேகிக்கப்படுகிறது. ஏற்கெனவே தேர்தலில் KKSSR-க்கு சீட் கிடைப்பது டவுட் என பேசப்படுகிறது. இதனை ஸ்மெல் செய்தே, தவெக அவரை அணுகக்கூடும் என அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது. ஆனால், இதுதொடர்பான Official தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

error: Content is protected !!