News July 5, 2025
துத்திப்பட்டு ஊராட்சி தலைவரின் அதிகாரம் ரத்து

ஆம்பூர் தாலுகா. மாதனூர் ஒன்றியம் துத்திப்பட்டு ஊராட்சியில் பல்வேறு முறைகேடு சம்பந்தமாக ஊராட்சி மன்ற தலைவர் சுவிதாகணேசன் மீது ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் 5 பேர் தொடர்ந்து கடந்த 6 மாத காலமாக தொடர்ந்து மாவட்ட ஆட்சியருக்கு புகார் கொடுத்த நிலையில் நேற்று ஊராட்சி மன்ற தலைவர் சுவேதாவின் காசோலையில் கையொப்பமிடும் அதிகாரத்தை மாவட்ட ஏ.டி பஞ்சாயத்து அலுவலர் ரத்து செய்யது உத்தரவு பிறப்பித்தார்.
Similar News
News November 17, 2025
திருப்பத்தூர்: கள்ளகாதலுக்கு தடையாக இருந்த கணவருக்கு வெட்டு!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த மில்லத் நகர் பகுதியில் அப்புன்ராஜ் என்பவரின், மனைவியுடன் பிரேம்குமார் என்ற இளைஞருக்கு கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இதனை தட்டிக் கேட்ட அப்புன்ராஜை கடந்த 13ஆம் தேதி வீடு புகுந்து வெட்டிவிட்டு பிரேம்குமார் தப்பி ஓடியுள்ளார். இந்நிலையில், நேற்று (16.11.2025)வாணியம்பாடி கிராமிய காவல்துறையினர் பிரேம்குமாரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
News November 17, 2025
திருப்பத்தூர்: இரவு ரோந்து பணி காவலர் விவரம்!

திருப்பத்தூர் மாவட்டத்தில், நேற்று இரவு 10 மணி முதல் இன்று (நவ.17) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News November 17, 2025
திருப்பத்தூர் வாக்காளர் திருத்தப் பணிகள் ஆய்வு

திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் 050–திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளுக்கான வாக்காளர் சிறப்பு தீவிரத் திருத்தப் பணிகள் நடைபெற்றது. வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடமிருந்து பெறப்படும் கணக்கீட்டு பதிவுகளை BLO செயலியில் புதுப்பிக்கும் பணியை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சியர் திருமதி க.சிவசௌந்திரவல்லி (நவ.16) அன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


