News November 18, 2024

துணை முதலமைச்சரை சந்தித்த சபாநாயகர் மகன்

image

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை நெல்லை கிழக்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளரும் தமிழக சபாநாயகர் அப்பாவு மகனுமான அலெக்ஸ் அப்பாவு மரியாதை நிமித்தமாக சென்னை தலைமைச் செயலகத்தில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றார். தொடர்ந்து கட்சி பணிகளை திறம்பட செய்யவும் எதிர்காலத்தில் இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் எனவும் துணை முதலமைச்சர் தெரிவித்தார்.

Similar News

News December 7, 2025

நெல்லை: மாடு குறுக்கே வந்ததால் தொழிலாளி பலி!

image

தச்சநல்லூரை சேர்ந்தவர் கணேசன் (55). கார் ஒர்க் ஷாப் தொழிலாளி. இவர் பணி முடிந்து மணிமூர்த்தீஸ்வரம் வழியாக பைக்கில் சென்ற போது சாலையின் குறுக்கே வந்த மாடு மீது பைக் மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று உயிரிழந்தார். மாநகரப் போக்குவரத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News December 7, 2025

நெல்லையில் தொழிலாளி தற்கொலை

image

சிவந்திபட்டியைச் சேர்ந்தவர் முத்துக்குமார் (45) சென்ட்ரிங் தொழிலாளி. இவரது மனைவி சரஸ்வதி இவர்களுக்கு 16 ஆண்டுகளாக குழந்தை இல்லை. குழந்தை ஏக்கத்தில் இருந்த முத்துக்குமார் விஎம் சத்திரம் அருகே நான்கு வழிச்சாலையில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதுக்குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News December 7, 2025

கூடங்குளம் அணுமின் நிலையம் புதிய அப்டேட்

image

ரஷ்ய அதிபர் புதின் இந்தியாவில்: கூடங்குளம் அணுமின் நிலையத்தை 6,000 MW திறன் கொண்ட இந்தியாவின் மிகப்பெரிய அணுதளமாக முழுமையாக செயல்படுத்த ரஷ்யா உறுதி அளித்தது. மலிவு மின்சாரம் கிடைக்கும் என புதின் தெரிவித்தார். 3-6ஆம் ரியாக்டர்கள் விரைவில் இயக்கத்தில் வருகின்றன. இரு நாடுகளும் இரண்டாவது அணுமின் நிலைய இடத்தை இறுதி செய்ய உடன்பாடு ஏற்பட்டது.

error: Content is protected !!