News November 19, 2025

தி.மலை : B.E முடித்தவரா? ரூ.50,000 சம்பளத்தில் வேலை ரெடி!

image

தி.மலை மக்களே இந்திய ஸ்டீல் ஆணையத்தில் 124 ‘Management Trainee’ காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு விண்ணப்பிக்க B.E/B.Tech படித்த பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.50,000 முதல் சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க டிச.5ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க <>இங்கே <<>>கிளிக் பண்ணுங்க. இந்த நல்ல வாய்பபை அனைவருக்கும் SHARE பண்ணுங்க

Similar News

News January 17, 2026

தி.மலை: நடந்து சென்றவர் மயங்கி விழுந்து பலி!

image

ஆரணி, மாமண்டூர் அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்தவர் முனியம்மாள் (65). இவர் கடந்த 13ம் தேதி ஆரணி – செய்யாறு சாலையில் நடந்து சென்றபோது மயக்கம் ஏற்பட்டு கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து நேற்று அவரது மருமகன் அளித்த புகாரின்பேரில், ஆரணி போலீசார் விசாரிக்கின்றனர்.

News January 17, 2026

தி.மலை: குளிக்க சென்றவர் பிணமாக வந்த சோகம்!

image

ஆரணி, குன்னத்தூரை சேர்ந்தவர் தமிம் அன்சாரி (56). கூலித் தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் மாலை கிணற்றுக்கு குளிக்க சென்றார். நீண்ட நேரமாகியும் அவர் மேலே வராததால், அங்கிருந்தவர்கள் ஊருக்குள் தகவல் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து ஆரணி தீயணைப்பு நிலைய அலுவலர் ஏழுமலை தலைமையில் நேற்று முன்தினம் இரவு முதல் அவரைத் தேடிய நிலையில், நேற்று காலை 10 மணியளவில் பிணமாக தமீம் அன்சாரி உடலை மீட்டனர்.

News January 17, 2026

தி.மலை: காவல்துறை இரவு ரோந்து விவரம் வெளியீடு

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று (16.01.2026) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை, இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!