News August 6, 2024

தி.மலை 32 குளங்கள் ஆக்கிரமிப்பு வழக்கு

image

திருவண்ணாமலை நகரில் உள்ள 32 குளங்கள் ஆக்கிரமிப்பை அகற்ற எடுத்த நடவடிக்கை குறித்து மாவட்ட ஆட்சியர்,வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, அறநிலையத் துறை ஆகியோர் விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்ய மூன்று வாரங்கள் அவகாசம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவ்வாறு அறிக்கை தாக்கல் செய்யாவிட்டால், உயர் நீதிமன்றமே குழு அமைத்து நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட நேரிடும் என எச்சரித்துள்ளது.

Similar News

News January 19, 2026

தி.மலை: குண்டு வீச்சில் முடித்த பொங்கல் விளையாட்டு!

image

செய்யாறு தாலுகா பெரும்பாலை கிராமத்தில் பொங்கல் விழாவை முன்னிட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. அப்போது தென்தண்டலம் கிராமத்தைச் சேர்ந்த பாலாஜி (28) அங்கு வந்துள்ளார். அவர் அங்கிருந்த இருந்தவர்களிடம் வீண் தகராறு செய்து தாக்கியதாக கூறப்படுகிறது. ஒருகட்டத்தில் கூட்டத்தின் நடுவே பெட்ரோல் குண்டு வீசியதால் 7 பேர் தீ காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். போலீசார் பாலாஜியை தேடி வருகின்றனர்.

News January 19, 2026

தி.மலை அருகே துடிதுடித்து பலி

image

செங்கம்–தி.மலை சாலையில் உள்ள சுண்டைக்காய் பாளையம் சந்திப்பு அருகே நடந்த விபத்தில், பதிவு எண் இல்லாத இருசக்கர வாகனத்தில் சென்ற மேல் கரியமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த ராஜவேல் (60) மீது பின்னால் வந்த கார் மோதியது. பலத்த காயமடைந்த அவர் செங்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் துடிதுடித்து உயிரிழந்தார். இந்த விபத்தில் குமார் (48) காயமடைந்தார். விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

News January 19, 2026

அண்ணாமலையார் கோவிலில் நடிகர் ரவி மோகன் தரிசனம்

image

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் (ஜனவரி 18) நேற்று நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷா மற்றும் அவரது பெற்றோருடன் சாமி தரிசனம் செய்தனர். கோயில் நிர்வாகம் சார்பில் அவர்களுக்கு மரியாதை செய்து பிரசாதம் வழங்கப்பட்டது. கோவில் ஊழியர்கள் மற்றும் பக்தர்கள் அவர்களுடன் செல்பி செல்ஃபி மற்றும் புகைப்படம் எடுத்துக் கொண்டு மகிழ்ந்தனர்.

error: Content is protected !!