News November 26, 2025

தி.மலை: வீடு கட்ட அரசு தரும் சூப்பர் ஆஃபர்

image

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் <>pmay-urban.gov.in <<>>என்ற இணையதளம் மூலம் வரும் டிச.31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ரேஷன் கார்டு, வங்கி கணக்கு போன்ற ஆவணங்களை இதனுடன் சமர்பிக்க வேண்டும். எல்லோரும் பயன்பெற SHARE பண்ணுங்க.

Similar News

News January 13, 2026

தி.மலை: பேருந்தில் செல்வோர் கவனத்திற்கு!

image

தி.மலை மக்களே, பொங்கல் விடுமுறையின் போது சொந்த ஊருக்கு செல்ல பேருந்து கிடைப்பது என்பது குதிரைக்கொம்பாக உள்ளது. இதுபோன்ற சமயத்தில் ஆம்னி பேருந்துகள் அதிகளவு கட்டணத்தை உயர்த்தி மக்களிடம் கொள்ளையடிக்கின்றன. இதை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. தி.மலையில் உள்ளவர்களுக்கோ (அ) உங்களுக்கு தெரிந்தவர்களுக்கோ ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் 9677398825 எண்ணில் புகார் செய்யலாம். ஷேர்!

News January 13, 2026

தி.மலை: விபத்தில் வாலிபர்கள் பலி!

image

தி.மலை, மொடையூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் விஜய் (25) மற்றும் விக்னேஷ் (16) நண்பர்களான இருவரும் மட்டபிறையூரிலிருந்து மொடையூர் கிராமத்திற்கு பைக்கில் சென்று கொண்டிருந்த போது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட இருவரும் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்து வந்த போளூர் போலீசார், உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

News January 13, 2026

தி.மலை: இளைஞர் மீது கொலைவெறி தாக்குதல்!

image

வந்தவாசி, தேசூா் பச்சையம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் பிரபாகா் (21) இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சதீஷ்குமாா் (25) என்பவருக்கும் கிரிக்கெட் விளையாடும் போது ஏற்பட்ட தகராறு தொடா்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை இரவு பிரபாகா் கைப்பேசியில் பேசிக் கொண்டிருந்த போது அங்கு வந்த சதீஷ்குமாா் உள்ளிட்ட 5 போ் பிரபாகரை தாக்கியுள்ளனர். இதுகுறித்து தேசூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!