News November 18, 2024
தி.மலை விளையாட்டு வீரர்களே தயாராகுங்கள்

தி.மலை எஸ்.கே.பி கல்வி குழுமம் நடத்தும் வாகை சூடவா 2.0 மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நவ.30 மற்றும் டிச.01 ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. இதில் 3 முதல் 17 வயது வரையிலான மாணவ மாணவிகள் பங்கேற்கலாம். தனிநபர் போட்டியில் சிலம்பம், சதுரங்கம், ஸ்கேட்டிங், குழு போட்டியில், கேரம், வாலிபால், மட்டைப்பந்து, எறிப்பந்து ஆகிய போட்டிகள் நடைபெறள்ளது. மேலும் தகவலுக்கு 9442955580 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.
Similar News
News December 16, 2025
தி.மலை: பால் லாரி மோதி கோர விபத்து; சம்பவ இடத்திலேயே பலி

சென்னையை சேர்ந்த சந்தோஷ்குமார்(38), கார்த்திக்(35), முனிவேல் (36) ஆகிய மூவரும் ஒரே பைக்கில் பருவதமலைக்கு சென்றனர். அப்போது, சேத்துப்பட்டு அருகே கோழிப்புலியூர் கூட்ரோடு பகுதியில் சென்றபோது எதிரே வந்த பால் லாரி இவர்கள் மீது மோதி கோர விபத்து ஏற்பட்டது. இதில், சந்தோஷ்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் கார்த்திக், முனிவேல் அதே கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
News December 15, 2025
தி.மலை: காவல்துறை இரவு ரோந்து பணி விவரம் வெளியீடு!

தி.மலை, இன்று (டிச.15) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. இரவு வேலைக்கு செல்லும் ஆண், பெண்களுக்கு உதவும்.
News December 15, 2025
தி.மலையில் 8th, 10th, +2, டிகிரி முடித்தவரா நீங்கள்?

தி.மலை மக்களே, தி.மலை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில், டிச.19 ஆம் தேதி காலை 10 மணி முதல் 3 மணி வரை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் இந்த முகாமில் 8th, 10th, +2, டிகிரி முடித்தவர்கள் கலந்து கொள்ளலாம். இம்முகாமில் 500க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. மேலும், விவரங்களுக்கு இங்கு <


