News June 17, 2024
தி.மலை வருகை தரும் எல்.முருகன்

செய்யாறு வட்டம், கீழ் நெல்லி வேளாண்மை அறிவியல் மையத்தில் நாளை நடைபெறும் நிகழ்ச்சியில் மத்திய தகவல் ஒளிபரப்பு துறை இணை அமைச்சர் எல். முருகன் பங்கேற்று விவசாயிகள் மற்றும் பண்ணை மகளிருக்கான நலத்திட்ட உதவிகளை நாளை மாலை வழங்குகிறார். இந்த தகவலை கீழ்நெல்லி வேளாண்மை அறிவியல் மைய மூத்த விஞ்ஞானி மற்றும் மைய தலைவர் சுரேஷ் வேணுகோபால் தெரிவித்துள்ளார்.
Similar News
News January 21, 2026
தி.மலையில் கூண்டோடு கைது

காலமுறை ஊதியம், குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியத்தை வழங்க வலியுறுத்தி திருவண்ணாமலை–யில் மறியலில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் நேற்று திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு மறியல் போராட்டதில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் போளூர் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேலும், போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 693 பேர் கைது செய்யப்பட்டனர்.
News January 21, 2026
தி.மலை GH-ல் பெரும் பரபரப்பு!

அண்டம்பள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜா(44). இவரது தந்தை ரங்கன். இவருக்கு உடல் நலம் பாதித்ததால் தி.மலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்தவமனையில் சிகிச்சைக்கு வந்துள்ளார். 5 மணி நேரம் ஆகியும் எந்த சிகிச்சையும் அளிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ராஜா வீடியோ எடுக்க முயன்றுள்ளார். டாக்டர் சோஜி, தன்னை பணி செய்ய விடாமல் தடுத்ததாக புகார் அளித்த நிலையில் போலீசார் ராஜாவை கைது செய்தனர்.
News January 21, 2026
தி.மலை: காவல்துறை இரவு ரோந்து பணி விவரம் வெளியீடு

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று (20.01.2026) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


