News August 18, 2025
தி.மலை: ரோந்து பணி காவலர்கள் விவரங்கள் வெளியீடு

திருவண்ணாமலை மாவட்ட காவல்துறையின் சார்பாக இன்று (ஆக-18) இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ள காவல்துறை அதிகாரிகள் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தங்களுடைய பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக செயல்படக்கூடிய நபர்கள் இருந்தாலோ அல்லது பாதுகாப்பின்மை பிரச்சனையை ஏற்பட்டாலோ அவர்களுடைய தொலைபேசி எண்கள் (அ) 100 என்ற எண்ணை அழைத்து புகார்களை பதிவு செய்யலாம்.
Similar News
News December 17, 2025
தி.மலை: முதியவர் மீது கார் மோதி பயங்கர விபத்து!

சேத்துப்பட்டு அடுத்த பாண்டியாபுரம் பகுதியை சேர்ந்தவர் கண்ணையன் (65), விவசாயி. இவர் நேற்று முன்தினம் மாலை பாண்டியாபுரம் பகுதியில் சேத்துப்பட்டு- போளூர் நெடுஞ்சாலையில் சைக்கிளை தள்ளிக்கொண்டு சாலையை கடக்க முயன்றார். அப்போது சேத்துப்பட்டில் இருந்து போளூர் நோக்கி சென்ற கார் கண்ணையன் மீது பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் பலத்த காயம் அடைந்தார். மேலும், மருத்துவமனையில் உயிரிழந்தார்.
News December 17, 2025
தி.மலை வந்த பிரபல காமெடி நடிகர்; யார் தெரியுமா?

தி.மலை அண்ணாமலையார் கோயிலில் மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு (டிச.16) நேற்று நடிகர் யோகிபாபு சாமி தரிசனம் செய்தார். அவருடன் பி.டி. ரமேஷ் குருக்கள், பி.டி.ஆர். கோகுல் குருக்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர். யோகிபாபுவுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. தரிசனத்திற்குப் பிறகு பக்தர்கள் ஆர்வமுடன் யோகிபாபுவுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
News December 17, 2025
தி.மலை: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

தி.மலை மாவட்டத்தில் இன்று (டிச.16) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


