News October 18, 2025

தி.மலை: ரோந்து பணி காவலர்கள் விவரங்கள் வெளியீடு

image

திருவண்ணாமலை மாவட்ட காவல்துறையின் சார்பாக நேற்று (அக்:17) இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ள காவல்துறை அதிகாரிகள் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தங்களுடைய பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக செயல்படக்கூடிய நபர்கள் இருந்தாலோ அல்லது பாதுகாப்பின்மை பிரச்சனையை ஏற்பட்டாலோ அவர்களுடைய தொலைபேசி எண்கள் (அ) 100 என்ற எண்ணை அழைத்து புகார்களை பதிவு செய்யலாம்.

Similar News

News November 12, 2025

தி.மலை: அதிரடி காட்டிய மாவட்ட கலெக்டர்!

image

சென்னை, புதுவண்ணாரப்பேட்டையை சேர்ந்த முகமது யாசின் மகன் ரம்ஷாத் (22) இவர் இணையதளம் மூலமாக பணத்தை கிரிப்டோகரன்சியாக மாற்றி தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டுள்ளார். இவரை தி.மலை மாவட்ட சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். அவர் மோசடியில் ஈடுபடுவதை தடுக்க அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட எஸ்.பி.சுதாகர் பரிந்துரைத்ததன் பேரில், மாவட்ட கலெக்டர், ராம்ஷாதை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.

News November 12, 2025

தி.மலையில் 3,000 ஆண்டுகள் பழமையான ‘பொக்கிஷம்’

image

தி.மலை, அடுத்த பெரும்பாக்கம், செ.அகரம் கிராம வனப்பகுதியில் பறவை ஆர்வலர் சிவக்குமார் தகவலின் படி, மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தை சேர்ந்த ஆய்வாளர்கள் குழு, இரு இடங்களில் பாறை ஓவியங்களை கண்டறிந்தனர். கோவக்கல் என்ற பாறை முகப்பில் ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதன் முன்பகுதியில், மனித உருவம் சதுரங்களை கொண்டு வரையப்பட்டுள்ளதாகவும், ஓவியங்கள் வேட்டை சமூகத்தின் வாழ்வியலை குறிப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

News November 12, 2025

தி.மலை: இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் (11.11.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!