News June 18, 2024
தி.மலை: மக்கள் குறைதீர் முகாம் ரத்து

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 12 தாலுகா அலுவலகங்களிலும் நாளை முதல் ஜமாபந்தி நடைபெறுவதால், திங்கள் கிழமை தோறும் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டம், மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம் ஆகியவை நாளை (ஜூன் 19) முதல் வரும் 28ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
Similar News
News January 22, 2026
தி.மலை: தவறாக அனுப்பிய Payment -ஐ இனி திரும்பப் பெறலாம்

செல்போன் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.
News January 22, 2026
தி.மலை பெண்கள் 2.5 ஏக்கர் நிலம் வாங்கலாம்

திருவண்ணாமலை மாவட்டம், விவசாயக் கூலிப் பெண்களை நில உரிமையாளர்களாக மாற்றும் வகையில் தமிழ்நாடு அரசு நன்னிலம் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினப் பெண்கள் 5 ஏக்கர் புஞ்சை அல்லது 2.5 ஏக்கர் நஞ்சை நிலம் வாங்க 50% மானியம் பெறலாம். மேலும் விபரங்களுக்கு மற்றும் விண்ணப்பங்கள் https://tahdco.com இணையதளத்தில் பதிவு செய்யலாம்.
News January 22, 2026
தி.மலை: பிஞ்சு குழந்தை துடிதுடித்து பலி

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த ராட்டினமங்கலம் பகுதியில் வசிப்பவர்கள் இளவரசன்- பவானி தம்பதி. இவர்களின் 3 வயது குழந்தை வீட்டின் வெளியே விளையாடிக்கொண்டிருந்த போது தண்ணீர் தொட்டியில் விழுந்து பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


