News August 23, 2025
தி.மலை: தேங்காய் விழுந்து 6 மாத குழந்தை பலி

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த தேவிகாபுரம் மலையாம்புரவடை கிராமத்தை சேர்ந்தவர் சிலம்பரசன். இவரது மனைவி அமுதா. அமுதா தனது 5 மாத பெண்குழந்தையை வீட்டின் வெளியே வைத்திருந்த போது, மரத்தில் இருந்து குழந்தையின் தலையில் விழுந்து பலத்த அடிபட்டது. வேலூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்த நிலையில், குழந்தை நேற்று உயிரிழந்தது. இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News January 23, 2026
JUST IN: தி.மலையில் காதலனை கைகழுவிய காதலி

தி.மலை மாவட்டம் செங்கம் அடுத்த உச்சிமலைக்குப்பம் பகுதியை சேர்ந்த காதல் ஜோடியான மதன்குமார்- இறையூரை சேர்ந்த ஆனந்தி ஆகியோர் வீட்டை வெளியேறினர். காவல் நிலையத்திற்கு காரில் வந்துகொண்டிருந்த போது பெண்ணை அழைத்து செல்ல அவர்களது பெற்றோர்கள் வந்தனர். மேலும், மகளின் காலில் பெற்றோர்கள் விழுந்ததால் மனம் மாறிய ஆனந்தி, காதலன் மதன்குமாரை கைவிட்டு பெற்றோருடன் சென்றார்.
News January 23, 2026
தி.மலை மக்களே கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க

சிலிண்டர், ரேஷன் கார்டு, ரேஷன் கடை பொருட்கள் குறித்த அனைத்து சந்தேகங்களுக்கும் உங்கள் பகுதி குடிமைப் பொருள் வழங்கல்&நுகர்வோர் பாதுகாப்பு துறை அதிகாரிகளை தொடர்பு கொள்ளுங்கள். தி.மலை மாவட்ட அதிகாரி- 9445000193, தி.மலை வட்டம்-9445000194, போளுர்-9445000195, செங்கம்- 9445000196, வந்தவாசி- 9445000197, ஆரணி- 9445000198, செய்யாறு-9445000199, தண்டராம்பட்டு-04188-246400.*கட்டாயம் தெரிய வேண்டிய எண்கள். SHARE
News January 23, 2026
தி.மலை: மாடால் வெடித்த தகராறு

வந்தவாசியை அடுத்த ஆராசூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ராமச்சந்திரன் மனைவி காளியம்மாள்(50). இவருக்கும் இதே கிராமத்தைச் சோ்ந்த இருசன் மனைவி சாந்தி (57) என்பவருக்கும், மாடு வயல்வெளியில் மேய்ந்த தகராறு தொடா்பாக முன்விரோதம் உள்ளது. இவா்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டதில், இரு தரப்பினரும் ஒருவரையொருவா் தாக்கிக் கொண்டனா். புகாரின் பேரில் 8 பேர் மீது வழக்கு பதிவு செய்யபட்டுள்ளது.


