News October 19, 2025
தி.மலை: தரமற்ற பெட்ரோலா? இதை பண்ணுங்க!

தி.மலை மக்களே, உங்கள் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்குகளில் வாகனங்களுக்கு வழங்கப்படும் பெட்ரோல் தரமானதாக இல்லையென்றால், நீங்கள் உடனடியாகப் புகார் அளிக்கலாம். இதற்காக, அனைத்து பெட்ரோல் நிறுவனங்களும் கட்டணமில்லா தொலைபேசி எண்களை அறிவித்துள்ளன.
1. இந்தியன் ஆயில்: 18002333555
2. பாரத் பெட்ரோல்: 1800224344
3. HP பெட்ரோல்: 9594723895
பயனுள்ள தகவலை நண்பர்களுக்கும் பகிருங்கள்!
Similar News
News December 11, 2025
தி.மலை: விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது

திருவண்ணாமலை அருணை தமிழ்ச் சங்கம் வழங்கும் மறைமலை அடிகளார், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, கலைவாணர் என்.எஸ்.கே., கிருபானந்த வாரியார் மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் விருதுகளுக்கு விண்ணப்பங்கள் 2025 டிசம்பர் 21-ம் தேதிக்குள் வரவேற்கப்படுகின்றன. விருதுகள் 2026 ஜனவரி 15-ம் தேதி தமிழர் திருநாளில் வழங்கப்படும். பரிசுத்தொகை ரூ.50 ஆயிரம். தொடர்பு: 9626498444, 9842347071.
News December 11, 2025
தி.மலை: ஆசிரியர் பணிக்கு 2,09,200 வரை சம்பளம்.. APPLY NOW!

கேந்திரிய வித்யாலயா மற்றும் நவோதயா வித்யாலயா பள்ளிகளில் உள்ள ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பதவிகளில் 14,967 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியானது. இதற்கு, 10-ம் வகுப்பு முதல் டிகிரி வரை படித்திருந்தால் போதும், சம்பளமாக ரூ.18,000 முதல் ரூ.2,09,200 வரை வழங்கப்படுகிறது. டிச.11 இன்றே கடைசி நாளாகும். விண்ணப்பிக்க விரும்புவோர் இங்கு <
News December 11, 2025
திருவண்ணாமலை: அரசு பேருந்து ஜப்தி!

இரன்டு வெவ்வேறு விபத்து வழக்குகளில் நீதிமன்ற உத்தரவின்படி பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்காத காரணத்தால் ஆரணி பேருந்து நிலையத்தில் அரசுப் பேருந்து ஜப்தி செய்யப்பட்டது. போளூரைச் சேர்ந்த ஹரி என்பவரின் உயிரிழப்புக்காக ரூ. 23.74 லட்சம் சேத்துப்பட்டை சேர்ந்த சீனு என்பவரின் காயம் தொடர்பாக ரூ. 4.59லட்சம் ஆகிய தொகைகளை வட்டியுடன் வழங்கத் தவறியதால், நீதிபதி உத்தரவின்பேரில் பேருந்து ஜப்தி செய்யப்பட்டது.


