News November 3, 2025
தி.மலை: இ-சேவையில் 60 ரூபாய்க்கு இத்தனை வசதியா?

அரசு இ-சேவை மையங்களில் ஆவணங்கள் தொடர்பான பிரச்னைகளை வெறும் 60 ரூபாயில் முடித்துவிடலாம். ஆம். பிறப்பு, இறப்பு, வாரிசு, வருவாய், இருப்பிடம், சாதி, முதல் பட்டதாரி, குடிபெயர்வு, விவசாய வருமானம், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், தமிழ் வழியில் படித்ததற்கான சான்று உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்கு வெறும் 60 ரூபாய் கட்டணம்தான். வெளியே சென்று விண்ணப்பித்தால் ரூ.100+க்கு மேல் வசூலிக்கப்படும். ஷேர் பண்ணுங்க.
Similar News
News November 13, 2025
தி.மலை: டிகிரி போதும்; ரூ.85,000 சம்பளத்தில் வேலை

பொதுத்துறை வங்கியான பஞ்சாப் தேசிய வங்கியில் (PNB), 750 உள்ளூர் வங்கி அதிகாரி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. எதாவது ஒரு பட்டப்படிப்பு முடித்திருந்தது 20 வயதுக்கு மேல் உள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு ரூ.48,480 முதல் 85,920 வரை சம்பளம் வழங்கப்பட இருக்கிறது. விருப்பமுள்ளவர்கள் நவ-23க்குள் <
News November 13, 2025
தி.மலை: தலைக்கேறிய குடி போதையால் கொலை!

தூசி அருகே கடந்த 20 நாட்களுக்கு முன்பு கபாலி (25) என்பவர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் தூசியை சேர்ந்த பாலாஜி (20), பாபு (20), யுவராஜ் (27) ஆகிேயாருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். விசாரணையில் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில் கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.
News November 13, 2025
தி.மலை: இரவு ரோந்து போலீசார் விவரம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று (நவ.12) இரவு 10 மணி முதல் இன்று (நவ.13) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


