News November 25, 2025
தி.மலை: இனி ஆதார் கார்டு வேண்டாம்.. இது போதும்!

திருப்பத்தூர் மக்களே.. இனிமேல் உங்களின் ஆதார் கார்டை எப்போதும் கையிலேயே எடுத்துச்செல்ல வேண்டிய அவசியம் இல்லை. <
Similar News
News January 18, 2026
தி.மலை: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி!

செய்யாறு, நாயன்தாங்கலைச் சேர்ந்தவர் தங்கராஜ் (36). இவர் சென்னையில் பணியாற்றி வந்தார். இவரது மனைவி திவ்யபாரதி. இவர்களுக்கு ராஜேஷ் (7), லத்தீஷ் (5) என்ற இரு மகன்கள் உள்ளனர். குடும்பத்துடன் பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு வந்த தங்கராஜ், தனது 2 மகன்களுடன் ஏரியில் மீன் பிடிக்க சென்றுள்ளார். மூவருக்கும் நீச்சல் தெரியாத நிலையில், மூவரும் சேற்றில் சிக்கி உயிரிழந்தனர். போலீசார் விசாரிக்கின்றனர்.
News January 18, 2026
தி.மலை: விபத்தில் வாலிபர் துடிதுடித்து பலி!

வந்தவாசி, மும்முனியை சோ்ந்தவா் தா்மன் (25). தனியாா் நிதி நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா். இவா், கடந்த வெள்ளிக்கிழமை பைக்கில் வந்தவாசிக்கு சென்ற போது, இந்திரா நகா் அருகே செல்லும் போது, முன்னால் சென்ற மினி சரக்கு வேனை முந்த முயன்றுள்ளார். இதில் வேன் மீது மோதியதில் இவா் கீழே விழுந்த போது, பின்னால் வந்த பைக் மோதியதில் தா்மன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
News January 18, 2026
தி.மலை: இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


