News October 18, 2025
தி.மலையில் ஆயுள் அதிகரிக்க செய்யும் கோயில்

தி.மலை மாவட்டம் ஆரணி, எரிகுப்பதில் ஏரிக்குப்பம் எந்திர சனீசுவரன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் சுமார் 1000 ஆண்டுகளுக்கு மேல் பழையமான கோயிலாகும், இந்த கோயிலுக்கு வந்து சனி பகவானை வழிபடுவதின் வழியே ஆயுள் அதிகரிக்கும் என்பது நம்பிக்கையாக இருக்கிறது. மேலும் வழக்குகளில் வெற்றிபெற இந்த சனிபகவான் அருள்புரிந்து வருகிறார். திருமண தடையை அகற்றி பல திருமணங்கள் நடந்துள்ளதாக பக்தர்கள் கூறுகின்றனர். ஷேர்.
Similar News
News November 10, 2025
தி.மலை கோயிலுக்கு வந்த நடிகர் ரியோ ராஜ்

திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்து அண்ணாமலையார் அருளை பெறுகின்றனர். இத்தகைய பிரசித்து பெற்ற கோவிலில் திரை பிரபலங்களும் அரசியல் ஆளுமைகளும் சாமி தரிசனம் செய்ய வருவதுண்டு. இந்நிலையில் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நேற்று (நவ.09) ’ஆண் பாவம் பொல்லாதது’ படம் வெற்றியடைய வேண்டி நடிகர் ரியோ சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோயில் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.
News November 9, 2025
தி.மலை: பஸ்ல போறவங்க இத நோட் பண்ணுங்க

பேருந்தில் டிக்கெட் எடுக்கும் போது மீதி சில்லரை பின்னர் தருவதாக கண்டக்டர் சொல்லி விட்டால், சில்லரை வாங்கும் வரை நிம்மதி இருக்காது. சில சமயம் மறந்து சில்லறை வாங்காமல் இறங்கியிருப்போம். சில்லறை வாங்காமல் இறங்கி விட்டால் 1800 599 1500 எண்ணை தொடர்பு கொண்டு, பயண சீட்டு விபரங்களை தெரிவித்து மீதி சில்லறையை G-PAY மூலம் பெறலாம். *பஸ்ல போகும் போது யூஸ் ஆகும் ஷேர் பண்ணுக*
News November 9, 2025
தி.மலை:: லைசன்ஸ் எடுக்க அலைய வேண்டாம்!

தி.மலை மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை ஆர்டிஓ அலுவலகம் செல்லாமல் https://parivahansewas.com/ என்ற இணையதளம் சென்று மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைன்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். (SHARE பண்ணுங்க).


