News July 16, 2024

திற்பரப்பு அருவியில் குளிக்க தடை விதிப்பு

image

குமரி மாவட்டத்தில் பரவலாக பெய்து வரும் மழையின் காரணமாக பேச்சிப்பாறை அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. நேற்று இரவு வினாடிக்கு 500 கன அடி உபரி நீர் அணையில் இருந்து கோதையாற்றுக்கு திறந்து விடப்பட்டது. இதனால் கோதையாற்றின் குறுக்கே உள்ள திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தொடர்ந்து திற்பரப்பு பேரூராட்சி நிர்வாகம் அருவியில் குளிப்பதற்கு தடை விதித்து எச்சரிக்கை பதாகை வைத்துள்ளது.

Similar News

News July 8, 2025

உள்ளூர் வங்கியில் ரூ.85,000 ஊதியத்தில் வேலை

image

பொதுத்துறை வங்கியான பரோடா வங்கியில் காலியாக உள்ள உள்ளூர் வங்கி அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும். சம்பளம் ரூ.48,000 முதல் ரூ.85,000 வரை வழங்கப்படுகிறது. இப்பணிக்கு தேர்வு மையம் மதுரை, விருதுநகர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் அமைக்கப்படும். விண்ணப்பிக்க இங்கே <>கிளிக்<<>> செய்யவும். கடைசி நாள் 24.7.25 ஆகும். SHARE பண்ணுங்க.

News July 8, 2025

குமரி அணைகளின் இன்றைய நீர்மட்டம் விபரம்

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் பாசனத்திற்கு பயன்படும் அணைகளின் இன்றைய (ஜூலை.8) நீர்மட்ட விவரம்; பேச்சிப்பாறை அணை 42.30 அடி (மொத்தம் 48 அடி), பெருஞ்சாணி அணை 71.25 அடி (77 அடி), சிற்றாறு 1 அணை 13.35 அடி (18 அடி), சிற்றாறு 2 அணை 13.45 அடி (18 அடி) நீர் உள்ளது. பேச்சிப்பாறைக்கு 471 கனஅடி, பெருஞ்சாணிக்கு 129 கன அடி நீர்வரத்தும் உள்ளது.

News July 8, 2025

குமரியில் கிராம உதவியாளர் பணியிடங்கள் அறிவிப்பு

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் காலியாக உள்ள கிராம உதவியாளர் (தலையாரி) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் ஊதியமாக ரூ.11,100 – ரூ.35,100 வரை வழங்கப்படும். விண்ணப்பதாரர் 21 வயது நிறைவு செய்து அந்த வட்டத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும். இதற்காக விண்ணப்பங்கள் கன்னியாகுமரி மாவட்ட அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விரைவில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT

error: Content is protected !!