News August 23, 2025

திருவாரூர்: ITI போதும் அரசு வேலை!

image

மத்திய அரசின் பாரத் ஹெவி எலெக்ட்ரிக்கல் நிறுவனத்தில் (BHEL) காலியாக உள்ள எலெக்ட்ரிஷியன், பிட்டர், வெல்டர் உள்ளிட்ட 515 பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ஐடிஐ படித்த 27 வயதுக்குட்பட்ட (SC/ST- 32, OBC-30) நபர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.29,500 முதல் ரூ.65,000 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே கிளிக் செய்து<<>>, விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

Similar News

News January 17, 2026

திருவாரூர் மாவட்டத்தில் தாழ்வாகப் பறந்த விமானம்

image

நன்னிலம் அருகே சொரக்குடி, மூங்கில்குடி, விசலூர், காக்கா கோட்டூர் பகுதிகளில் நேற்று காலை ஒரு விமானம் மிகவும் தாழ்வாகப் பறந்தது. மேலும் மிகவும் தாழ்வாக தென்னை மரங்களை தொட்டுச் செல்லும் அளவிற்கு பறந்ததால் பலத்த சத்தம் கேட்டது. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். இதனை அடுத்து, தாழ்வாகப் பறந்தது பயிற்சி விமானம் என்பது தெரிய வந்தது.

News January 17, 2026

திருவாரூர்: இலவச தையல் மிஷின் வேண்டுமா?

image

சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.72,000-க்கும் கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு திருவாரூர் மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தை அணுகவும். இந்த தகவலை SHARE செய்யவும்.

News January 17, 2026

திருவாரூரில் குரூப் 4 தேர்வுக்கு இலவச பயிற்சி

image

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 4 தேர்வு எழுத விருப்பமுள்ள நபர்களுக்கு இலவச பயிற்சி வகுப்பு திருவாரூரில் இம்மாதம் 20-ம் தேதி முதல் தொடங்க உள்ளது. குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேர்வில் பங்கேற்க உள்ளவர்கள் தேர்வுக்கு விண்ணப்பம் செய்த நகல், குடும்ப அட்டை, ஆதார் அட்டை நகல்களுடன் திருவாரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் அணுகி பயன்பெறலாம்.

error: Content is protected !!