News March 25, 2024

திருவாரூர்: வாக்காளர் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம்

image

ஏப்ரல்.19ஆம் தேதி நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலை முன்னிட்டு கூத்தாநல்லூர் நகராட்சி சார்பில் அனைவரும் 100 % வாக்களிப்போம் என்பதை வலியுறுத்தி இன்று கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதை ஆட்சியர் சாரு ஸ்ரீ தொடங்கி வைத்தார். கோட்டாட்சியர் சங்கீதா ஆணையர் சித்ராசோனியா மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மாவட்ட அலுவலர் புவனா ஆகியோர் கலந்து கொண்டனர்.

Similar News

News November 7, 2025

திருவாரூர்: கடலில் தவறி விழுந்தவர் பலி

image

முத்துப்பேட்டை கடல் முகத்துவார பகுதியில் மன்னங்காடை சேர்ந்த மீனவர் ரவி (39) மீன் பிடித்துக் கொண்டிருந்த போது கடலில் தவறி விழுந்து மூழ்கியுள்ளார். இதுகுறித்து தகவலறிந்து சென்ற போலீசார் ரவியை சடலமாக மீட்டனர். இதையடுத்து அவரது உடலை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார் சம்பவம் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

News November 7, 2025

திருவாரூர்: இரவு ரோந்து பணி விவரங்கள்

image

திருவாரூர் மாவட்டத்தில் இன்று ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்தில் உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்களும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!

News November 6, 2025

திருவாரூர்: தேனீ பயிற்சி முகாமை பார்வையிட்ட ஆட்சியர்

image

நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் திறன் மேம்பாட்டு பயிற்சி மற்றும் நான் முதல்வன் திட்டத்தின் கீழ், தேனீ வளர்ப்பு பயிற்சி தேர்ந்தெடுக்கப்பட்ட இளைஞர்கள் மற்றும் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இன்று காலை திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனசந்திரன் பயிற்சியினை திடீர் ஆய்வு செய்தார். பயிற்சியாளர் களிடம் பயிற்சி குறித்த கருத்துக்களை கேட்டறிந்தார்.

error: Content is protected !!