News August 22, 2025

திருவாரூர்: மின்சாரம் தாக்கி பரிதாப பலி!

image

வலங்கைமான், இனாம்கிளியூர் கீழத்தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 43) விவசாய தொழிலாளி, சம்பவத்தன்று இவரது வீட்டில் மின் விளக்குகள் எரியவில்லை என தெரிகிறது. இதனால் ரமேஷ், வீட்டின் மின் இணைப்பை நிறுத்தாமல் பழுதை சரி பார்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக ரமேசை மின்சாரம் தாக்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து காவல்துறை விசாரித்து வருகின்றனர்.

Similar News

News January 20, 2026

திருவாரூர்: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

image

திருவாரூர் மக்களே, உங்கள் வீடு அல்லது தெருவில் திடீரென மின்தடை ஏற்பட்டால், இனி லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய அவசியமில்லை. தற்போது, பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் போதும், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் உங்கள் வீடு தேடி வருவார். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!’

News January 20, 2026

திருவாரூர்: ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனிக்க

image

திருவாரூர் மாவட்ட மக்களே உங்கள் பகுதி ரேஷன் கடைகளில் பொருட்கள் சரியாக வழங்காமல் இருப்பது, தரமில்லாத பொருட்கள் வழங்குவது, பணியாளர்கள் நேரத்திற்கு வராமல் இருப்பது, பொதுமக்களிடம் முறையாக நடந்துகொள்ளாமல் இருப்பது போன்ற பிரச்சனைகள் உள்ளதா? அப்படியென்றால் உடனே 1967 அல்லது 1800-425-5901 என்ற எண்ணை தொடர்பு கொண்டு உங்களால் புகார் அளிக்க முடியும். இந்த தகவலை மறக்காமல் மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News January 20, 2026

திருவாரூர்: விவசாயிகள் குறைதீர் கூட்டம் அறிவிப்பு

image

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “திருவாரூர் கோட்டத்தில் மாதந்தோறும் நடக்கும் விவசாயிகள் குறைதீர் கூட்டம் வரும் 22-ம் தேதி வியாழக்கிழமை மாலை 4 மணிக்கு திருவாரூர் ஆர்டிஓ அலுவலகத்தில் நடைபெற உள்ளது. எனவே வருவாய் கோட்டத்தில் உள்ள விவசாயிகள், இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு குறைகளை தெரிவிக்கலாம்.” என ஆட்சியர் அறிவித்துள்ளார்.

error: Content is protected !!