News August 5, 2024
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

திருவாரூர் மாவட்டத்தில் அனைத்து கிராமங்களிலும், நாளை முதல் 21 நாட்களுக்கு நடைபெற உள்ள தோல் கழலை தடுப்பூசி முகாமில் கலந்து கொண்டு, கால்நடைகளுக்கு தோல் கழலை நோய் தடுப்பூசி செலுத்த அறிவுறுத்தியுள்ளார். மேலும் விவரங்களுக்கு, அருகிலுள்ள கால்நடை மருந்தக உதவி மருத்துவரை அணுகி பயன்பெறலாம் என திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ அறிவித்துள்ளார்.
Similar News
News January 14, 2026
திருவாரூர் இரவு ரோந்து பணி காவலர்கள் அறிவிப்பு

திருவாரூர் மாவட்டத்தில் நேற்று (ஜன.13) இரவு 10 மணி முதல் இன்று (ஜன.14) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு, உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!
News January 14, 2026
தாயகம் திரும்பியோர் கடன் விவரம் தெரிவிக்க ஆட்சியர் அறிவிப்பு

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனசந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “மாவட்டத்தில் வசித்து வரும் பர்மா மற்றும் இலங்கையிலிருந்து தாயகம் திரும்பியோருக்கு வழங்கப்பட்ட கடன்களுக்கு அடமானம் செய்யப்பட்ட நில ஆவணங்கள் மீது உள்ள கடனை நீக்கிவிட்டு திரும்ப ஒப்படைக்க அரசு அறிவித்துள்ளது. எனவே இது தொடர்பான விவரங்களுடன் உடனே கலெக்டர் அல்லது ஆர்டிஓ அலுவலகத்தை அணுகுமாறு” தெரிவித்துள்ளார்.
News January 13, 2026
திருவாரூர்: நோய் வராமல் காக்கும் அம்மன்!

நீடாமங்கலம் அருகே பூவனூர் சதுரங்க வல்லபநாதர் கோயில் அமைந்துள்ளது. திருநாவுக்கரசரால் பாடல் பெற்ற இக்கோவிலில் சாமுண்டீஸ்வரி அம்மனுக்கென தனிசன்னதி அமைந்துள்ளது. வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு நடைபெறும் சிறப்பு பூஜையில் கலந்து கொண்டு அங்கு வழங்கப்படும் வேர் ஒன்றை உடம்பில் கட்டிக்கொண்டால் நோய்கள் ஏதும் நெருங்காது என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. SHARE பண்ணுங்க.


