News November 29, 2024
திருவாரூர் மாவட்டத்தில் 405 வீடுகள் சேதம்

தென் கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் இடைவிடாமல் கனமழை செய்து வருகிறது. தொடர் மழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் இதுவரை 333 குடிசை வீடுகள், 72 ஒட்டு வீடுகள் என மொத்தம் 405 வீடுகள் சேதம் அடைந்துள்ளன.
Similar News
News November 17, 2025
திருவாரூர்: முதியவர் மீது கார் மோதல்

வலங்கைமான் அருகே உள்ள நகரம் மாந்தோப்பு தெருவைச் சேர்ந்தவர் விவசாய தொழிலாளி கண்ணன் (60). இவர் கடந்த 13-ம் தேதி அதிகாலை 6 மணி அளவில் பொய்கை பாலம் அருகில் நடந்து சென்ற போது, அடையாளம் தெரியாத கார் ஒன்று கண்ணன் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த கண்ணன் கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது இதுகுறித்து வலங்கைமான் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 17, 2025
திருவாரூர்: பயிர் காப்பீடு தேதி நீட்டிப்பு!

திருவாரூர் மாவட்டம் முழுவதும் சம்பா தாளடி பயிர் காப்பீடு தேதி வருகின்ற நவம்பர் 30 வரை செய்யலாம் என நீட்டிக்கப்பட்டுள்ளது. அது குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “27 மாவட்டங்களில் சம்பா நெற்பயிர் காப்பீடு செய்ய மழை மற்றும் சிறப்பு வாக்காளர் திருத்தம் உள்ளிட்ட காரணங்களால் பயிர் காப்பீடு தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.” என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
News November 17, 2025
திருவாரூர் மாவட்ட ரோந்து காவலர்களின் விவரம்

திருவாரூர் மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள் எண்கள் தரப்பட்டுள்ளது. இரவு நேர குற்றங்களை தடுக்க காவல் துறையின் உடனடி உதவிக்கு, எங்களது இரவு ரோந்து காவல் அதிகாரிகளை அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யவும் என திருவாரூர் மாவட்ட காவல்துறையின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


