News August 6, 2024
திருவாரூர் மாவட்டத்தில் 4 லட்சம் பேர் பயன்

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மக்களை தேடி மருத்துவ திட்டத்தின் 4-ஆம் தொடக்க விழா கொண்டாடப்பட்டது. இதில் கலெக்டர் சாருஸ்ரீ கூறியதாவது: திருவாரூர் மாவட்டத்தில் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளித்ததில் இதுவரை மொத்தம் 3,98,148 பேர் மக்களை தேடி மருத்துவ திட்டத்தில் பயனடைந்துள்ளனர் என்றார் அவர்.
Similar News
News January 13, 2026
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்

திருவாரூர் மாவட்ட நிர்வாகிகள் சார்பில் மாசில்லா போகி, மகிழ்ச்சியான பொங்கல் கொண்டாட அறிவுறுத்தி உள்ளது. அதன்படி இயற்கை சார்ந்த பொருட்களைக் கொண்டு பாரம்பரியமாக போகி பண்டிகை கொண்டாடவும்; சுற்றுச்சூழல் பாதிப்பு இல்லாத பொருட்களை பயன்படுத்தவும்; பிளாஸ்டிக் டயர், டீம் ரப்பர், செயற்கை துணிகளை எரிக்க வேண்டாம் எனவும் மாவட்ட ஆட்சியர் சார்பில், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
News January 13, 2026
திருவாரூர்: இனி சொத்து தகராறுக்கு Whatsapp-ல் தீர்வு!

திருவாரூர் மக்களே, இனி வக்கீல் ஆலோசனை பெற நீங்கள் அங்கும் இங்கும் அலைய வேண்டிய அவசியமில்லை. இதற்காக மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. ‘72177 11814’ என்ற எண்ணிற்கு உங்களது Whatsapp-ல் இருந்து ஒரு மெசேஜ் அனுப்பினால் போதும், சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, சிவில் வழக்கு போன்றவற்றிற்கு இலவச சட்ட ஆலோசனைகள் வழங்கப்படும். இந்த பயனுள்ள தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!
News January 13, 2026
திருவாரூர்: 2 நாட்கள் அரசு மதுபான கடைகள் விடுமுறை

வருகிற 16-ம் தேதி திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டும், 26-ம் தேதி நாட்டினுடைய குடியரசு தினத்தை முன்னிட்டும் இரண்டு நாட்கள் மாவட்டத்திலுள்ள அரசு மதுபான கடைகள் மற்றும் மதுபான கூடங்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதனை மீறி மதுபான கடைகள் மற்றும் மதுபானக்கூடங்கள் திறக்கும் பட்சத்தில் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


