News August 19, 2025
திருவாரூர்: பயிற்சியோடு ரூ.72,000 சம்பளத்தில் வேலை (1/2)

TMB வங்கியில் புராபேஷன் அதிகாரி பணிக்கான பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. கிளாஸ் ரூம் டிரெயினிங்கின் போது மாதம் ரூ.5000, இன்டெர்ன்ஷிப்பில் மாதம் ரூ.24,000, தற்காலிக பணியில் மாதம் ரூ.48,000, பணி நிரந்தரம் செய்யப்பட்ட பின் மாதம் ரூ.72,000 சம்பளம் வழங்கப்படும். இதற்கு நாளைக்குள் (ஆக.20) இங்கு <
Similar News
News December 6, 2025
திருவாரூர்: மருத்துவ இணை இயக்குனர் பதவியேற்பு

திருவாரூர் மாவட்ட மருத்துவ இணை இயக்குனர் பணியில் இன்று பணியமர்த்தம் செய்யப்பட்டது. திருவாரூர் மாவட்ட மருத்துவ இணை இயக்குனர் பணியில் மருத்துவர் S.சுரேஷ்குமார் MBBS.,Dch என்பவர் இன்று நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து மாவட்ட மருத்துவ அணி சார்பில் நிர்வாகிகள் உறுப்பினர்கள் உள்ளிட்டோர், இன்று புதிதாக பதவியேற்ற சுரேஷ்குமார் அவர்களுக்கு பாராட்டு தெரிவித்தனர்.
News December 6, 2025
திருவாரூர்: தவெக சார்பில் நினைவு தினம் அனுசரிப்பு

திருவாரூர் மேற்கு மாவட்ட தவெக சார்பில், அம்பேத்கரின் 70வது நினைவு தினம் இன்று மன்னார்குடியில் அனுசரிக்கப்பட்டது. மன்னார்குடி பெருந்து நிலையம் அருகே உள்ள அண்ணல் அம்பேத்கரின் முழு உருவ சிலைக்கு, தமிழக வெற்றிக் கழகத்தின் திருவாரூர் மேற்கு மாவட்ட செயலாளர் ராஜா தலைமையில், தவெக தொண்டர்கள் அம்பேத்கரின் உருவ சிலைக்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
News December 6, 2025
திருவாரூர்: பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டுகள் சிறை!

காரியமங்கலம் கிராமத்தில், கடந்த 2015 ஆம் ஆண்டு தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பி.ஆர் பாண்டியன் தலைமையில், 22 நபர்கள் ஓஎன்ஜிசி நிறுவனத்தை சேதப்படுத்திய வழக்கு திருவாரூர் மகிளா நீதிமன்றத்தில் நடந்த நிலையில், இன்று பி .ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை, 13 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, திருவாரூர் மகிளா நீதி மன்ற நீதிபதி சரத்ராஜ் அதிரடி உத்தரவுவிடுத்தார்.


