News October 10, 2025
திருவாரூர் கிராம சபை கூட்டத்தில் பங்கேற்க ஆட்சியர் அழைப்பு

திருவாரூர் மாவட்டத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நடைபெற இருந்த கிராம சபை கூட்டம் நிர்வாக காரணத்தால் ஒத்தி வைக்கப்பட்டது. இக்கூட்டம் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 430 ஊராட்சிகளில் நாளை 11.10.25.(சனிக்கிழமை) காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளது. இதில் கிராம மக்கள் கலந்துகொண்டு கருத்துக்களை தெரிவித்து ஊராட்சியின் வளர்ச்சியில் பங்களிக்குமாறு மாவட்ட ஆட்சியர் வ.மோகனந்திரன் கேட்டுக்கொண்டுள்ளார்.
Similar News
News November 8, 2025
திருவாரூர்: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூடியை சேர்ந்தவர் பரத்(23). இவருக்கும் பூண்டி சந்தப்பேட்டையை சேர்ந்த தினேஷ்(30) என்வருக்கும் இடையே கடந்த 2022 ஆண்டு தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், பரத் தினேஷை பியர் பாட்டிலால் தாக்கியுள்ளார். இதுகுறித்து வழக்கு திருத்துறைப்பூண்டி நீதிமன்த்தில் நடந்து வந்த நிலையில், பரத்திற்கு 3 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.1000 அபராதம் விதித்து நீதிபதி ரவிசந்திரன் தீர்ப்பளித்தார்.
News November 8, 2025
திருவாரூர்: பஸ் பைக் மோதி விபத்து – பெண் பலி

திருவாரூர் மாவட்டம் கட்டக்குடி கிராமத்தை சேர்ந்த தம்பதியினர் பாண்டியன்(50), மீனா(47).இருவரும் நேற்று,மான்னர்குடியில் இருந்து கட்டக்குடிக்கு சென்று கொண்டிருந்தபோது, மேலவாசல் என்ற இடத்தில் சுற்றுலா பஸ்சும், பைக்கும் மோதிக்கொண்டன. இதில், சம்பவ இடத்துலே மீனா உயிரிழந்தார். பலத்த காயங்களுடன் பாண்டியன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து மன்னார்குடி போலீஸ் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News November 8, 2025
திருவாரூர்: இரவு ரோந்து பணி விவரங்கள்

திருவாரூர் மாவட்டத்தில் இன்று (நவ.7) ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்தில் உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்களும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!


