News October 1, 2025

திருவாரூர்: கறவை மாடு வாங்க ரூ.1.2 லட்சம் கடன்

image

தமிழக அரசின் TABCEDCO மூலம் ஒரு பயனாளிக்கு, 2 கறவை மாடுகள் வாங்க ரூ.1,20,000 கடனுதவி வழங்கப்படுகிறது. இந்த கடனை திருப்பி செலுத்த 3 ஆண்டுகள் கால அவகாசம் உண்டு. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் <>tabcedco.net என்ற இணையதளத்தில்<<>> விண்ணப்பித்து கொள்ளலாம். குறிப்பு: கடனுதவி பெற மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!

Similar News

News December 16, 2025

திருவாரூர்: பண இழப்பை தவிர்க இத செய்ங்க!

image

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!

News December 16, 2025

திருவாரூர்: மாவட்ட ஆட்சியரகம் விடுத்த அறிவிப்பு

image

திருவாரூர் மாவட்டத்தில், தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் தமிழ் ஆட்சி மொழி சட்ட வாரம் டிசம்பர் 17 முதல் டிசம்பர் 26 வரை கொண்டாடப்பட உள்ளது. அதனைத் தொடர்ந்து கணினி தமிழ், ஒருங்குறி பண்பாடு, ஆட்சி மொழி சட்ட அரசாணை, மொழிபெயர்ச்சி, கலைச்சொல்லாக்கம் வரைவுகள் மற்றும் குறிப்புகள் எழுதுதல் உள்ளிட்ட போட்டிகள் திருவாரூர் திரு.வி.க கல்லூரியில் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியரகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News December 16, 2025

திருவாரூர்: தமிழ் ஆசிரியருக்கு முதல்வர் விருது

image

திருவாரூர் மாவட்டத்தைச் சார்ந்த தமிழ் ஆசிரியரும், நகைச்சுவை பட்டிமன்ற பேச்சாளருமாகிய சண்முகசுந்தரம் ‘இயல் செல்வம்’ என்ற விருதை பெற்றுள்ளார். மேலும் இந்த இயல் செல்வம் விருது, முத்தமிழ் பேரவை சார்பில் நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினி மூலம் வழங்கப்பட்டது. இதுமட்டும் அல்லாது, முதலமைச்சரிடம் இரண்டாவது முறையாக சண்முகசுந்தரம் விருது பெறுவது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!