News November 14, 2025
திருவாரூர்: ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி கேட்ட தவெகவினர்

புதிய வாக்காளர் திருத்த சட்டத்தை (SIR) எதிர்த்து தமிழக வெற்றிக் கழகத்தினர் வரும் நவம்பர் 16 அன்று திருவாரூர் புதிய ரயில் நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுவதையொட்டி, அதற்கு அனுமதி வழங்க கோரி திருவாரூர் நகர காவல் நிலையத்தில் இன்று மனு வழங்கினர். இந்த நிகழ்வில் திருவாரூர் மாவட்ட செயலாளர் மதன் மற்றும் வழக்கறிஞர் மதிவாணன், உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.
Similar News
News December 5, 2025
திருவாரூர்: பட்டா வைத்திருப்போர் கவனத்திற்கு…

திருவாரூர் மக்களே, நில ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் <
News December 5, 2025
திருவாரூர்: வேலை வாய்ப்பு முகாம் அறிவிப்பு!

திருவாரூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் சார்பில், மாபெரும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் வருகின்ற 13.12.2025-ம் தேதி அன்று திருவாரூர் விளமல் கல்லுப் பாலம் அருகில், கஸ்தூர்பா காந்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறவுள்ளது. இதற்கு www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
News December 5, 2025
திருவாரூர் மாவட்டத்தில் ஆட்டோக்கள் ஓடாது

திருவாரூர் புதிய பேருந்து நிலையத்தில் சுழற்சி முறையில் ஆட்டோக்கள் இயக்குவதை தடை செய்யக்கோரி, நாளை (டிச.06) காலை 10 மணியளவில் திருவாரூர் மாவட்டம் முழுவதும் உள்ள சிஐடியு தொழிற்சங்கத்தினர் சார்பாக ஆட்டோக்கள் ஓடாது என திருவாரூர் மாவட்ட சிஐடியு ஆட்டோ தொழிற்சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.


