News October 12, 2025
திருவாரூர்: ஆசிரியர் நியமனத் தேர்வு-ஆட்சியர் ஆய்வு

திருவாரூர் மாவட்டத்தில் இன்று (அக்டோபர் 12) தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் முதுகலை ஆசிரியர்களுக்கான தேர்வு நடைபெற்றது. இந்த மையத்தினை திருவாரூர் மாவட்ட ஆட்சியர் வ.மோகனச்சந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த நிகழ்வில், அரசு அதிகாரிகளும் உடனிருந்தனர். மேலும் இந்த தேர்வில் ஆண்கள் மற்றும் பெண்கள் என இருபாலரும் ஆர்வமுடன் கலந்து கொண்டு தேர்வு எழுதினர்.
Similar News
News November 16, 2025
திருவாரூர் மாவட்டத்திற்கு மிக கனமழை எச்சரிக்கை

தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, திருவாரூர் மாவட்டத்திற்கு இன்று ஆரஞ்சு அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் நாளையும் (நவ.17) இடி, மின்னலுடன் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே, பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
News November 16, 2025
திருவாரூர்: ஆடு, மாடு வளர்க்க ரூ.50 லட்சம்!

ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடை வளர்ப்பில் விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு உத்யமி மித்ரா திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இதன் மூலம், கால்நடை பண்ணைகள் அமைப்பதற்கு ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் <
News November 16, 2025
திருவாரூர்: MADHURA DIGITAL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

திருவாரூரில் அமைந்துள்ள MADHURA DIGITAL நிறுவனத்தில் காலியாக உள்ள ‘PHOTOSHOP FLEX DESIGNER’ பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. குறைந்தது 18 வயது நிரம்பிய ஆண் மற்றும் பெண்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் <


