News August 24, 2024
திருவாரூர் அருகே 34,000 மாணவர்களுக்கு மாத்திரை

முத்துப்பேட்டை ஒன்றியத்தில் உள்ள 102 அங்கன்வாடி, 105 பள்ளிகளில் உள்ள 19 வயது நிரம்பிய சுமார் 34,000 மாணவ, மாணவிகளுக்கு சுகாதார துறை சார்பில் நேற்று தேசிய குடற்புழு நீக்க தினத்தை முன்னிட்டு பூச்சி மாத்திரைகள் வழங்கப்பட்டது. இதில், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கிள்ளிவளவன் தலைமையில் சுகாதார துறையினர் கலந்துக்கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
Similar News
News November 12, 2025
திருவாரூர்: கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000 நிதியுதவி

தமிழக அரசு சார்பில் கர்ப்பிணி பெண்களின் நலன் கருதி, ‘டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி’ எனும் அருமையான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் கர்ப்பிணிகளுக்கு 3 தவணைகளாக ரூ.14,000 நிதியுதவியும், ரூ.4,000 மதிப்புள்ள ஊட்டச்சத்து பெட்டகமும் வழங்கப்படுகிறது. திட்டத்தில் பயன்பெற விரும்பும் கர்ப்பிணிகள் <
News November 12, 2025
திருவாரூரில் பைக் மோதி முதியவர் படுகாயம்

திருவாரூரைச் சேர்ந்த தேவேந்திரன் (65) என்பவர் மெயின் ரோட்டில் நடந்து சென்றபோது, சாலையை கடக்க முயன்ற நிலையில், எதிரே வந்த சந்திரவிளாகத்தைச் சேர்ந்த வினோத் (36) என்பவர் ஓட்டி வந்த பைக் தேவேந்திரன் மீது மோதியதில் தேவேந்திரன் படுகாயம் அடைந்து, திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த திருவாரூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்.
News November 12, 2025
திருவாரூர்: மனைவி கண்முன்னே கணவன் பலி

குடவாசலைச் சேர்ந்த உத்திராபதி (70) மற்றும் அவரது மனைவி சாந்தா (60) இருவரும் பைக்கில் திருவாரூர் – கும்பகோணம் மெயின் ரோட்டில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது பைக்கை ஒட்டி சென்ற உத்திராபதி திடீரென்று மயக்கம் ஏற்பட்டு விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த குடவாசல் போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.


