News October 19, 2025

திருவாரூர் அருகே சாராயம் கடத்தல்

image

பேரளம் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த கார் ஒன்றை நிறுத்த முயன்றனர். அப்போது காரின் டிரைவர் போலீசாரை கண்டதும் காரை பாதியில் நிறுத்தி விட்டு தப்பி ஓடியுள்ளார். இதையடுத்து போலீசார் காரில் சோதனை செய்ததில், ரூ.2 லட்சம் மதிப்பிலான 2,000 சாராய மதுபாட்டில்கள் காரைக்காலில் இருந்து கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவற்றை பறிமுதல் செய்தனர்.

Similar News

News December 14, 2025

திருவாரூர்: 1297 வழக்குகளுக்கு தீர்வு

image

திருவாரூர் மாவட்ட சட்ட பணிகள் குழு சார்பில் நேற்று லோக் அதாலத் நடைபெற்றது. இதில் முதன்மை மாவட்ட நீதிபதி செல்வமுத்துக்குமாரி தலைமை வகித்தார். மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் 3,102 வழக்குகள் எடுக்கப்பட்டு 1,297 வழக்குகளில் ரூ 3 கோடியே 78 லட்சத்து 55 ஆயிரத்து 648 மதிப்பிற்கு சமரச தீர்வு ஏற்பட்டது. இதில் நீதிபதிகள் சரத்ராஜ், லதா, முருகன், மாணிக்கம் முகமதுபசில், லிஷி ஆகியோர் கலந்து கொண்டனர்

News December 14, 2025

திருவாரூர்: ரயில் எண்கள் மாற்றம்

image

ஜனவரி 1 முதல் பயணிகள் ரயில் எண்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சிறப்பு ரயில் எண்களில் இயங்கும் திருவாரூர்- காரைக்குடி ரயில் பழைய எண் 06197 புதிய எண் 56827, காரைக்குடி – திருவாரூர் ரயில் பழைய எண் 06198 புதிய எண் 56828, திருவாரூர் -பட்டுக்கோட்டை ரயில் பழைய எண் 06851 புதிய எண் 76831, பட்டுக்கோட்டை – திருவாரூர் பழைய எண் 06852 புதிய எண் 76832 என்ற நிரந்தர எண்களின் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News December 14, 2025

திருவாரூர் மாவட்ட மக்களுக்கு அறிவிப்பு

image

திருவாரூர் மாவட்ட காவல்துறை சார்பில், ஆன்லைன் கடன் மோசடிகளில் இருந்து பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தி உள்ளது. அலைபேசியில் புதிய செயலியை பதிவிறக்கம் செய்யும்போது, அதன் அதிகாரப்பூர்வ தகவல்களை சரி பார்த்து செயல்படவும், நன்கு அறியப்பட்ட கடன் வாங்கும் தளங்களை மட்டும் பயன்படுத்தவும், மேலும் சைபர் கிரைம் தொடர்புக்கு 1930 இன்றைய எண்ணில் தொடர்பு கொள்ளவும் காவல்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

error: Content is protected !!